புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் துவங்கியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு துறையின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் உலக தரம் வாய்ந்த விளையாட்டு கட்டமைப்புகளை ஏற்படுத்தி திறமையான விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பதன் மூலம் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளாக உருவாக்க முடியும் என்ற அடிப்படையில் மாவட்டந்தோறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி புதுக்கோட்டை டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோட்டைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் சுமார் 5690 நபர்கள் 15,738 விளையாட விண்ணப்பித்துள்ளனர். இவ்விளையாட்டு போட்டிகள் 9.2.2023 முதல் 27. 2 .2023 வரை நடத்தப்பட உள்ளது.
அதன்படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியடிகளுக்கு வாலிபால், கூடை, பந்து, சிலம்பம், இறகு பந்து, நீச்சல் மேசை பந்து, கால்பந்து கபடி, கிரிக்கெட் போட்டிகளும், பொது பிரிவினருக்கு வாலிபால், தடகளம், சிலம்பம், இறகுபந்து, கபடி, கிரிக்கெட், செஸ் போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு கபடி, செஸ் ,தடகளம் கைப்பந்து போட்டிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீட்டர், 100 மீட்டர், ஓட்டம், இறகு பந்து, வாலிபால், எறிபந்து கபடி போட்டிகளும் நடைபெற உள்ளன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து மண்டல மற்றும் மாநில அளவிலும் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை காண்பித்து புதுக்கோட்டை மாவட்டம் விளையாட்டு போட்டிகளும் தலைசிறந்த மாவட்டம் என்று நிரூபிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai