ஹோம் /புதுக்கோட்டை /

விராலிமலையில் சுகாதாரமற்ற பேருந்து நிறுத்தம்... அவதிப்படும் பயணிகள்...  

விராலிமலையில் சுகாதாரமற்ற பேருந்து நிறுத்தம்... அவதிப்படும் பயணிகள்...  

விராலிமலையில் சுகாதாரமற்ற பேருந்து நிறுத்தம்

விராலிமலையில் சுகாதாரமற்ற பேருந்து நிறுத்தம்

Pudhukottai District News : வெகு நேரம் நிற்க முடியாது நிலையில் முதியவர்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் இதனை சகித்துக்கொண்டும், முகத்தை மூடியும் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து தான் புதுக்கோட்டைக்கு பேருந்துகள் வந்து செல்லும். சுற்றுவட்டார கிராம மக்கள் அதிக அளவில் இந்த பேருந்து நிறுத்தத்தை தான் பயன்படுத்துகின்றனர்.

  ஆனால் இந்த பேருந்து நிறுத்தத்தின் முன் ஒரு கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இதனால் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் கிராம மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

  கழிவுநீர் கால்வாயால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் மற்றும் ஈக்கள் தொல்லை அதிகரிக்கிறது. இதனால் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துவதே இல்லை என சில பயணிகள் தெரிவித்தனர்.

  இதையும் படிங்க : பேரரசர்களே வியந்த கொடும்பாளூர் சிற்றரசர் கட்டிய சிவன் கோயில்..! புதுக்கோட்டையில் எங்கு இருக்கிறது தெரியுமா? 

  வெகு நேரம் நிற்க முடியாது நிலையில் முதியவர்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் இதனை சகித்துக்கொண்டும், முகத்தை மூடியும் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

  செய்தியாளர் : சினேகா - புதுக்கோட்டை 

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Pudukkottai