ஹோம் /புதுக்கோட்டை /

வண்ண விளக்குகள், குடில்கள், குழந்தைகள் நடனம்...! புதுக்கோட்டையில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..! 

வண்ண விளக்குகள், குடில்கள், குழந்தைகள் நடனம்...! புதுக்கோட்டையில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..! 

X
புதுக்கோட்டையில்

புதுக்கோட்டையில் களைகட்டிய கிறிஸ்துமஸ்

Pudukottai Christmas Celebration : புதுக்கோட்டையில் களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பெரிய அளவிலான கொண்டாட்டம் இல்லை.

இந்த ஆண்டு நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இதனையடுத்து புதுக்கோட்டையில் அனைத்து தேவாலயங்களிலும் இயேசு கிறிஸ்து பிறந்த நாளை குறிக்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறிய அளவிலான குடில் முதல் பெரிய குடில்கள் வரை அமைத்து பிராத்தனை செய்தனர்.

புதுக்கோட்டையில் பேராங்குளம், அன்னாவாசல், கீரனூர், இலுப்பூர், விராலிமலை, பெருஞ்சுனை, மேட்டுப்பட்டி, போன்ற புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதையும் படிங்க : உத்தமர் காந்தி விருது... புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இதில் முக்கியமாக பேராங்குளம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் மின்னொளியில் அலங்காரம் மற்றும் குடில் அமைப்பது போன்ற ஏற்பாடுகள் விருவிருப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திரு இருதய ஆண்டவர் ஆலயம் கண்களை கவரும் வகையில் ஜொலித்தது.

மேலும் இயேசு கிறிஸ்துவின் குடில் பல்வேறு வகையான மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஸ்டார்களும் மேலும் அழகு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் விழா தொடங்கியது. குடில்கள் அருகில் குழந்தைகளின் நடனத்துடன் இயேசு கிறிஸ்துவின் உற்சாக விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் - சினேகா விஜயன்

First published:

Tags: Christmas, Local News, Pudukkottai