முகப்பு /புதுக்கோட்டை /

"அண்ணா" என்று அழைத்த புதுக்கோட்டை ஆட்சியர்.. நெகிழ்ந்து போன விவசாயிகள்!

"அண்ணா" என்று அழைத்த புதுக்கோட்டை ஆட்சியர்.. நெகிழ்ந்து போன விவசாயிகள்!

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

Pudukottai News | புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், மாவட்ட கூட்டரங்கில் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், மாவட்ட கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஆட்சியர் கவிதா ராமு பேசுகையில், விவசாயிகள் விடுத்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், புதுக்கோட்டை விவசாயிகள், சந்தை ரக நெற்பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், தமிழக அரசின் பல்வேறு வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அப்போது, கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ‘அண்ணா’ என்று அழைத்தது அங்கிருந்த விவசாயிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

First published:

Tags: District collectors, Local News, Pudukkottai