ஹோம் /புதுக்கோட்டை /

முதல்வன் பட பாணியில் ரேஷன் கடையில் திடீர் ஆய்வு நடத்திய ஆட்சியர்!

முதல்வன் பட பாணியில் ரேஷன் கடையில் திடீர் ஆய்வு நடத்திய ஆட்சியர்!

புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு திடீர் ஆய்வு

புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு திடீர் ஆய்வு

Pudukkottai collector | புதுக்கோட்டை மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளின் செயல்பாடு குறித்து ஆட்சித்தலைவர் நேரில் சென்று ஆய்வு

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டத்தில் நியாய விலை கடைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை வட்டம் கூட்டுறவுத்துறையால் நடத்தப்படும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை அர்பன் 27 மற்றும் அர்பன் 21 ஆகிய இரண்டு நியாய விலை கடைகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் பார்வைபார்வையிட்டு ஆய்வு செய்தார்.

75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசின் உயர் அலுவலர்களால் நாடு முழுவதும் சுமார் 5000 நியாய விலை கடைகளின் செயல்பாட்டினை ஆய்வு செய்தும், அதன் மூலம் நியாய விலை கடைகளை மேம்படுத்தவும், ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை மற்றும் பிரதம மந்திரியின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தினையும் முழுமையாக அறிந்து கொள்ளவும், சரிபார்ப்பு பட்டியலின் ஆய்வு செய்யப்பட்ட நியாய விலை கடைகளின் விவரங்களை உரிய இணைய முகப்பில் பதிவு செய்தல் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு புதுக்கோட்டை வட்டத்தில் உள்ளநியாய விலை கடைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் இந்த ஆய்வின் போது பொதுமக்களுக்கு நியாய விலை கடைகளில் பொருட்கள் வழங்கிய பிறகு முறையாக கைபேசியில் தகவல் வருகிறதா என்பது குறித்தும், நியாய விலை கடைகளில் முதலுதவி பெட்டி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி , உள் கட்டமைப்பு தேவைகள் பயனாளிகள் அடிப்படை வசதிகள் நியாய விலை கடைகளில் அடிப்படையாக இருக்க வேண்டிய அத்தியாவசிய தளவாடங்கள் பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டணமில்லா எண் 1967/ 1800 / 14445 ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டம் கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் பட்டியல் போன்ற விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

செய்தியாளர்: சினேகா விஜயன், புதுக்கோட்டை.

First published:

Tags: District collectors, Local News, Pudukkottai