ஹோம் /புதுக்கோட்டை /

"பொங்கலோ.. பொங்கல்.."புதுக்கோட்டையில் தயாராகும் மண்பானைகள்..!

"பொங்கலோ.. பொங்கல்.."புதுக்கோட்டையில் தயாராகும் மண்பானைகள்..!

X
பொங்கல்

பொங்கல் பண்டிகைக்கு தயார் நிலையில் உள்ள மண் பானைகள் 

Pudukkottai pongal pot | புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பானைகள் தயாராகி வருகிறது. வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ஏராளமான பெண்கள் மண்பானை தொழில் செய்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் வெண்மணி கிராமத்தில் மண்பானை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இங்கு பெண்கள் 10 வருடங்களுக்கு மேலாக மண்பாண்ட தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பெண்கள் ஒன்றினைந்து தற்போது வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 14 நபர் கொண்ட குழுவாக இணைந்து மண்பாண்டங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் இவர்களுக்கு மண்பாண்டங்கள் செய்யும் மின்சாரம் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மண் பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்களை கேட்ட போது வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 75,000 எங்களுக்கு துவக்க நிதியாக வழங்கினார்கள்... அதை பயன்படுத்தி மண்பானை செய்யும் மின்சார இயந்திரம் இரண்டு வாங்கினோம்... அதை வைத்து குறைந்த நேரத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான மண்பாண்டங்கள் செய்து கொண்டிருக்கிறோம்..இதனால் எங்களுடைய உற்பத்தி செய்யும் நேரமானது குறைந்து முன்பு இருந்ததை விட தற்பொழுது வருமானம் அதிகமாக உள்ளது.. அதாவது முன்பு நாள் ஒன்றுக்கு இரண்டு நபர்கள் சேர்ந்து அதிகபட்சமாக 10 பானைகள் மட்டுமே செய்ய இயலும்.. ஆனால் தற்போது மின்சார இயந்திரத்தை பயன்படுத்தி ஒரு நாளைக்கு 20 முதல் 25 வரை எண்ணிக்கையில் மண்பானைகளை ஒரு நபர் கொண்டு உற்பத்தி செய்கிறோம்.. இதனால் எங்களுடைய மாத வருமானம் ஆயிரத்தில் இருந்து தற்பொழுது 15,000 ஆக உயர்ந்துள்ளது.

அதோடு இல்லாமல் தற்பொழுது பொங்கல் பண்டிகை வருவதால் அதிக எண்ணிக்கையிலான மண்பானைகள் செய்து கொண்டு வருகிறோம்.சிறிய அளவுகள் முதல் பெரிய அளவு வரையிலான விதவிதமான மண்பானைகள் செய்து கொண்டு வருகிறோம். மண்பானை மட்டுமல்லாமல் நாங்கள் அடுப்பு, கோழி கூண்டு, விளக்கு கூண்டு, விளக்கு, தொட்டி, குதிரை பொம்மைகள், சாமி சிலைகள் இன்னும் பல உருவங்கள் ஆகிய பொருட்களும் செய்து கொண்டு வருகிறோம். இந்த பொருட்களுக்கு வாழ்ந்து காட்டும் திட்டத்தின் மூலமாக ஆர்டர் ஒன்றை வழங்கியுள்ளனர். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது . வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கு எங்களுடைய தொழில் குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அரசாங்கத்திடம் எங்களுடைய ஒரு சிறிய கோரிக்கையை வைக்கிறோம்.அது என்னவென்றால் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு கொடுக்கும்போது கரும்பு, அரிசி இன்னும் பல பொருட்கள் கொடுக்கப்படுகிறது. அத்துடன் சேர்த்து மண்பானை ஒன்றும் பரிசாக கொடுத்தால். எங்களுடைய வாழ்வாதாரம் ஆனது இன்னும் மேம்படும் என்பது எங்களுடைய கோரிக்கையாகும்.

முந்தைய காலத்தில் நாம் அனைவரும் மண்பானையில் சமைத்தே சாப்பிட்டு வந்தோம். குடிப்பதற்கு கூட மண் பானையில் உள்ள நீர் பயன்படுத்தினோம். ஆனால் காலப்போக்கில் மண்பானை பயன்பாடு என்பது மறந்து போய்விட்டது. மண்பானையை சமைத்து சாப்பிட்டால் உணவும் ருசியாக இருக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.என்பதை மனதில் கொண்டு எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். என்று தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Pongal 2023, Pudukkottai