முகப்பு /புதுக்கோட்டை /

அறந்தாங்கியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..

அறந்தாங்கியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..

X
அறந்தாங்கியில்

அறந்தாங்கியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

Pudukottai News | அறந்தாங்கி ராமேஸ்வரம் செல்லும் சாலையில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறந்தாங்கி ராமேஸ்வரம் செல்லும் சாலையில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆவுடையார் கோவிலை சேர்ந்த மாணிக்கம் என்பவரை அதே ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்த எம்.எஸ்.கே.பழனி,ஸ்ரீராம், தீபக், சந்தான பிச்சை ஆகியோர் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி அவர் அணிந்திருந்த தங்க செயின் ஆகியவற்றை பறித்துச் சென்றதாகவும் இதனால் மாணிக்கம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரை தாக்கிய நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் அவர்கள் மீது அதிக எண்ணிக்கையில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர்கள் மீது குண்டாஸ் போட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்து காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

குற்றவாளிகளை கைது செய்வதாகவும் வாக்குறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். பொதுமக்களின் போராட்டம் காரணமாக அறந்தாங்கி ராமேஸ்வரம் சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

top videos
    First published:

    Tags: Local News, Pudukkottai