ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு விருந்து கொடுத்து அசத்திய ஆசிரியர்கள்... ஏன் தெரியுமா?

புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு விருந்து கொடுத்து அசத்திய ஆசிரியர்கள்... ஏன் தெரியுமா?

மாணவர்களுக்கு விருந்து

மாணவர்களுக்கு விருந்து

Pudukottai District News : கண்டிப்பில் நல்ல ஆசானாகவும், அரவனைப்பதில் நல்ல தாயாவும் உள்ள இவர்கள் போன்ற நல்ல ஆசிரியர்களால் மட்டுமே நல்ல தலைமுறையை உருவாக்க முடியும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொடும்பாளூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளிசெயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

  அணைத்து விழாக்களும் இந்த பள்ளியில் வெகு விமர்சையாக கொண்டாடுவதுவழக்கம். அதிலும் குழந்தைகள் தின விழா என்றால் சொல்லவா வேண்டும் கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது.

  அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற குழந்தைகள் தின விழாவும் மிகச் சிறப்பாக இந்த பள்ளியில் கொண்டாடப்பட்டது. இசை, நடனம், நாடகம், கட்டுரை, பேச்சு, கவிதை, நகைச்சுவை என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள்நடைப்பெற்றன.

  இதையும் படிங்க : யூடியூப் மூலம் தொழில் முனைவோராகிய புதுக்கோட்டை பெண்கள்!

  கரகாட்டம் போன்ற கிராமிய கலைகளுக்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் மாணவிகள் தலையில்கரகம் வைத்து ஆடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு அவர்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

  இது மட்டும் இன்றி ஆசிரியர்களும் பாடல் பாடியும், கவிதைகள் கூறியும் மாணவர்களை உற்சாகப்படுத்தினர். பாடல்களில் மாணவர்களை நல்வழிபடுத்தும் சிந்தனை வரிகளும் தவறாது இடம்பிடித்தன.

  ஆசிரியர்களாக அல்லது குழந்தைகளா? என குழம்பும் அளவிற்கு, ஆசிரியர்கள் குழந்தைகளாய் மாறி நடனமாடி குழந்தைகள் தின விழாவைகொண்டாடினர்.

  இதையும் படிங்க : மழைக்காலத்தில் ஒழுகும் புதுக்கோட்டை அரசு பள்ளியின் அவலம்.. மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம்....

  கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் மாணவர்களுக்கு ஆசியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அறுசுவை உணவு பரிமாரப்பட்டது. ஆசிரியர்களே மாணவர்களுக்கு பரிமாரியது மேலும் சிறப்பை சேர்த்தது. தலைமை ஆசிரியரும் மாணவர்களோடு இணைந்து அமர்ந்து உணவு உண்டார்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  கண்டிப்பில் நல்ல ஆசானாகவும், அரவனைப்பதில் நல்ல தாயாவும் உள்ள இவர்கள் போன்ற நல்ல ஆசிரியர்களால் மட்டுமே நல்ல தலைமுறையை உருவாக்க முடியும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

  சினேகா - புதுக்கோட்டை செய்தியாளர்

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Pudukkottai