முகப்பு /புதுக்கோட்டை /

"குழந்தை நல பரிசு பெட்டகம்" புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ்!

"குழந்தை நல பரிசு பெட்டகம்" புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ்!

X
தாய்மார்களுக்கு

தாய்மார்களுக்கு குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கப்படுதல். 

Pudukkottai | அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.1,000 மதிப்புடைய ‘ குழந்தை நல பரிசுப் பெட்டகம்' வழங்கப்படும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu | Pudukkottai

தமிழக அரசின் சார்பில் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு குழந்தை நல பரிசு பெற்ற வழங்கப்படுகிறது. இது மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. 

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.1,000 மதிப்புடைய ‘ குழந்தை நல பரிசுப் பெட்டகம்' வழங்கப்படும். அதில், குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான துண்டு, குழந்தை உடை, படுக்கை, பாதுகாப்பு வலை, குழந்தை நாப்கின், எண்ணெய் டப்பா, ஷாம்பூ, சோப்புப் பெட்டி, சோப்பு, நக வெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க கை கழுவும் திரவம், தாய்க்கு சோப்பு, ஆரோக்கியத்தை அதிகரிக்கும் சௌபாக்கியா சுண்டி லேகியம், தாய், பச்சிளம் குழந்தையைப் பராமரிக்க தேவையானப் பொருள்களை வைத்துக் கொள்ள ஒரு பெட்டகம் என மொத்தம் 16 பொருள்களை உள்ளடக்கியதாகும்.

இந்த குழந்தை நல பெட்டகம் ஏழை எளிய தாய்மார்கள் முதல் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்மணி அழகம்மாளுக்கு குழந்தை நல பெட்டகம் வழங்கப்பட்டது.

அதனைப் பெற்றுக் கொண்ட அழகம்மாள் பேசியபோது அரசின் மூலம் வழங்கப்படும்இந்த குழந்தை நல பெட்டக ஏழை எளிய அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும் இந்த 16 பொருட்கள் அடங்கிய தொகுப்பு குழந்தை பிறந்தவுடன் வழங்கப்படுவதால் அது குழந்தையை பராமரித்துக் கொள்ள பயனுள்ளதாக அமைகிறது என்றும் இந்த குழந்தை நல பெட்டகம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Pudukkottai