முகப்பு /புதுக்கோட்டை /

இருந்திராப்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா 

இருந்திராப்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா 

X
இருந்திராப்பட்டி

இருந்திராப்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா 

Irunthirapatti Mutthumariamman Temple |புதுக்கோட்டை மாவட்டம் இருந்திராப்பட்டி முத்துமாரியம்மன் கோவில்  திருவிழாவின் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள இருந்திராப்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பழமை வாய்ந்தது. இங்கு ஆண்டு தோறும் திருவிழா விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு திருவிழாவானது கொடியேற்றப்பட்டு, காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து உபயதாரர்கள் சார்பில் மண்டகபடி நடத்தப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இருந்திராப்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா

தொடர்ந்து அம்பாள் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா காலங்களில் உபயதாரர்கள் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பால்குடம், அலகு குத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

இதையும் படிங்க : கம்பம் டூ தென்கொரியா.. தேனி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் காவலர்..

இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் சுமந்து வந்தனர். நூற்றுக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் சுமார் 10 அடி நீளம் கொண்ட வேல் வடிவிலான அலகு குத்தி, பக்தி பாடல்களுக்கு நடனம் ஆடி ஊரின் முக்கிய வீதிகளில் சுற்றி வலம் வந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    பின்னர், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் முத்துமாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரானது ஊரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து நிலை நின்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தி சென்றனர்.

    First published:

    Tags: Local News, Pudukkottai