Home /pudukkottai /

செவிவழிச் செய்தி மூலம் நூற்றாண்டுகள் பழமையான சிவாலயத்தை கண்டறிந்து புணரமைத்த புதுகை மக்கள்

செவிவழிச் செய்தி மூலம் நூற்றாண்டுகள் பழமையான சிவாலயத்தை கண்டறிந்து புணரமைத்த புதுகை மக்கள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை - வெட்டிவயல் சிவாலயம்

Pudukkottai District | நூற்றாண்டுகள் பழமையான வெட்டிவயல் சிவாலயம் - புதுக்கோட்டை மாவட்டத்திலேயே இந்தக் கோவிலில் மட்டும்தான் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய மரங்களும் இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai
புதுக்கோட்டை மாவட்டம் வெட்டிவயல் ஊர் மக்களால் புதுப்பிக்கப்பட்டு வழிபாட்டில் இருக்கும் பல நூறு ஆண்டுகள் பழமையான சிவாலயம். சைவத்திற்கும் வைணவத்திற்கும் ஒரே அளவிலான முக்கியத்துவத்துடன் விளங்கும் கோவிலின் வரலாற்றுச் சுவடுகளை பத்திரப்படுத்தாததால் செவி வழிச் செய்தி மூலம் கோவிலைக் கண்டறிந்து புணரமைத்த பொதுமக்கள். 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து கடற்கரைப் பகுதியான கட்டுமாவடி செல்லும் வழியில் நாகுடிக்கு முந்தைய ஊராக இருக்கும் ஊர் வெட்டிவயல்.

வெட்டிவயல் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் தார்ச்சாலையில் ஒரு கிலோமீட்டர் பயணித்தால் குடியிருப்புப் பகுதிகளைத் தாண்டி ஊரின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கிறது காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயம்.

இதையும் படிங்க:  புதுக்கோட்டையில் ஒரு குட்டி ஊட்டி..

பல ஆண்டுகளாக புதரும் முட்செடிகளும் மண்டிக் கிடந்த பகுதியில் சிவாலயம் இருந்ததாக பல நூறு ஆண்டுகளாக செவி வழிச் செய்தியாக கிராம மக்களுக்கு கடத்தப்பட்டு வந்திருக்கிறது.
2010 ம் ஆண்டு வாக்கில் அந்த முட்புதர்களை தூய்மை செய்து பார்த்தபோது மிகவும் சிதிலமடைந்த நிலையில், 90% சேதமடைந்த சிவாலயம் தென்பட்டிருக்கிறது. ஊர்மக்கள் மற்றும் ஆன்மீக வாதிகளின் முயற்சியால் கடந்த 27-08-2015 அன்று காசி விஸ்வநாதர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்று இருக்கிறது.

ஆலயத்திற்கு செல்வதே மன அமைதி தேடித்தான் என்பதற்கேற்றார் போல கோவில் வளாகத்திற்குள் நுழைந்ததுமே நம்மை ஆட்கொள்ளும் அமைதியான சூழலில் கோவில் அமைந்திருக்கிறது.
கோவிலின் நுழைவு வாயிலைத் தாண்டியவுடனே பிரதோஷ நந்தி காட்சி தருகிறார். அவருக்கு நேர் எதிரே கிழக்குப் பார்த்தவாரு காட்சி தருகிறார் காசி விஸ்வநாதர். அவருக்கு இடப்புறமாக தனிச் சன்னிதியில் தெற்கு பார்த்வாறு அருள் பாளிக்கிறார் அம்பிகை காசி விசாலாட்சி.

இதையும் படிங்க:  பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் புதுக்கோட்டை அறம்வளர்த்த நாயகி திருக்கோவில்- சிறப்புகள் தெரியுமா?

கோவிலின் பிரகாரத்தில், நாகர், குருபகவான், விநாயகர், முருகப் பெருமான், துர்க்கை, சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரகங்கள் என அனைவரும் ஆகம விதியின்படி அவர்களுக்கு உரிய இடத்தில் இருந்து அருள் பாளிக்கின்றனர்.

கோவிலின் சிறப்புகள்:

இந்தக் கோவிலின் தனிச் சிறப்புகளாக, கருடாழ்வார் தரிசிக்கும் கோலத்தில் யோக நரசிம்மரும், ஆஞ்சனேயரும் கோவில் வளாகத்தில் தனிச் சன்னிதியாக அமைந்து காட்சி தருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே இந்தக் கோவிலில் மட்டும்தான் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய மரங்களும் இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:  கீரமங்கலம் மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கை இது தான்.. பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

'சிவனும்-ஹரியும் ஒன்னு' இந்த வார்த்தைகள் கிராமப்புறங்களில் அதிகமாகப் பயன்படும் வார்த்தைகளாகும், அந்த வார்த்தைகளுக்கு ஏற்றவாறு இந்தக் கோவிலில் சைவமும் வைணவமும் ஒரு சேர இருந்து நம்பி வரும் பக்தர்களின் குறை தீர்த்து வருகின்றது.
கிராமப்புற கோவிலாக இருந்தாலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்த கோவிலைத் தேடி பக்தர்கள் வருவதாகவும், மெல்ல மெல்ல கோவிலின் புகழ் வெளி வருவதால் பக்தர்களின் எண்ணிக்கையும் மேலோங்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர் கோவில் நிர்வாகத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இக்கோவிலில் வந்து வழிபட்டால் குழந்தை செல்வம் உடனடியாகக் கிடைப்பதாக பக்தர்களிடையே நம்பிக்கை இருந்து வருகிறது.
இக்கோவிலை தரிசிக்க விரும்புபவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து நாகுடி செல்லும் பேருந்துகளில் ஏறி வெட்டிவயல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடைபயணமாக பத்து நிமிடத்தில் இக்கோவிலை அடையலாம்.
Published by:Arun
First published:

Tags: Local News, Pudukkottai

அடுத்த செய்தி