புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலை அருகில் உள்ள விசாலூரில் சுமார் 75 வருடங்களுக்கு முன்னர் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தருவதற்கு இந்த பண்ணை தொடங்கப்பட்டது.
தோட்டக்கலைத்துறை மூலம் நடத்தப்படும் இந்த அண்ணா பண்ணை ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கு குறைவான விலையில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள், பூச்செடிகள், பழச்செடிகள், விதைகள், அழகு செடிகள், மூலிகை செடிகள், மரக்கன்றுகள் என அனைத்து வகையான செடிகளும் மரக்கன்றுகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
மேலும் உயிரி உரமும் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் முதல் மாடித்தோட்டம் அமைப்பவர்கள் வரை, வீட்டிற்கு தேவையான அழகு செடிகள் மற்றும் மரக்கன்றுகள் ஆகியவற்றை இங்கு குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர்.
பழ செடிகளில் மா, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா,மாதுளை, பலா போன்றவை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் முதன்மையான உற்பத்தியில் மா கன்றுகள் உள்ளன. ஹீமாயுதின், பங்கனப்பள்ளி, அல்போன்சா, செந்தூரா, பெங்களூரா, நீலம் என பல வகையான மா கன்று ரகங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
அதேபோல் கொத்தவர, வெண்டை, கத்தரி, மிளகாய் ஆகிய காய்கறிகளின் நன்கு தேர்ந்த விதைகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஆடி பட்டம் மற்றும் தைப்பட்டத்திற்கும் தேவையான நேரங்களில் விவசாயிகளுக்கு விதைகளை மலிவு விலையில் வழங்கப்படுகிறது.
தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருவேப்பிலை, கிட்னி பிரச்சனை சரி செய்யும் பூனை மீசை மூலிகை செடி, மல்டி வைட்டமின் நிறைந்த தவசி கீரை, செரிமானம் சளி பிரச்சனை நீங்க ஓமவல்லி, ஆடாதோடை, சர்க்கரையை கட்டுப்படுத்தும் சிறியாநங்கை, அனைத்து விஷங்களையும் முறிக்கும் பெரியா நங்கை என 35 க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் இங்கு வளர்க்கப்பட்டு விற்பனைக்கு உள்ளது.
ஆர்னமெண்டல் பிளாண்ட்ஸ் எனப்படும் அழகுக்காக வளர்க்கப்படும் செடிகளான, அரேடியா, அலமென்டா, ப்ரெடன், கிளியோ டென்ட்டா, பெண்டாஸ் முதல் செம்பருத்தி வரை அனைத்து வகையான பூச்செடிகள் மற்றும் அரிய வகை அழகு செடிகள் இங்கு மலிவு விலையில் கிடைக்கும். மாடித்தோட்டம் அமைக்க தேவைப்படும் செடிகளை பெண்கள் இங்கு வந்து குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர்.
சூடோனோமோஸ் போன்ற உயிரி உரமும் இங்கு தயாரிக்கப்படுகிறது. மேலும் முந்திரி, தேக்கு போன்ற நிழல் தரும் மரங்களும் வளர்க்கப்படுகின்றன. வறட்சியான இடங்களுக்கு ஏற்ற செடிகளையும் வள்ர்த்து விவசாயிகளுக்கு மலிவு விலையில் வழங்கப்படுகின்றன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மாடித்தோட்டம் அமைக்கும் பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு மலிவு விலையில் தரமான செடிகள் கிடைப்பதால் இந்த பண்ணை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை செய்தியாளர் - சினேகா விஜயன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai