முகப்பு /புதுக்கோட்டை /

”பனை பொருட்களை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை காத்திடுங்கள்” - புதுக்கோட்டை ஆட்சியர் அறிவுரை..

”பனை பொருட்களை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை காத்திடுங்கள்” - புதுக்கோட்டை ஆட்சியர் அறிவுரை..

X
பனை

பனை பொருட்கள்

Pudukkottai News |புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பனைப் பொருட்கள் விற்பனை நிலையத்தை ஆட்சியர் கவிதா ராமு தொடங்கி வைத்தார். 

  • Last Updated :
  • Pudukkottai, India

தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம், தமிழ்நாடு மாநில பனை வெல்லம் சார்பில் பனை பொருட்கள் விற்பனை நிலையம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்.

இந்த நிலையத்தில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சுவையான பதநீர், பனை வெல்லம், பனங்கற்கண்டு, சுக்கு காபி, சுக்கு பனங்கற்கண்டு மிட்டாய், சில்லு கருப்பட்டி, பனம்பழ சாறு, பனை ஓலை பொருட்கள், தூரிகை வகைகள், கதர் கிராம கைத்தொழில் பொருட்கள், தேன் ஆகியவை கிடைக்கிறது.”உடல் நலத்திற்கு மிகவும் தேவையான இயற்கை ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பனை பொருட்கள், கதர் கிராம கைத்தொழில் பொருட்கள் ஆகியவை இந்த நிலையத்தில் மிகக் குறைந்த விலையில் மக்கள் வாங்கி பயன்பெறலாம்” என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் இதுகுறித்து பனை பொருள் பெரு வளர்த்திட்ட அலுவலர் ஆறுமுகம் பேசியபோது,  “இந்த பனை பொருட்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டி பனை பெருவளர் திட்டத்தின் மூலம் தயார் செய்யப்பட்டவை மக்கள் அனைவரும் இவற்றினை வாங்கி பயன்பெற வேண்டும்” என்று அவரும் கேட்டுக்கொண்டார்.

    First published:

    Tags: Local News, Pudukkottai