முகப்பு /புதுக்கோட்டை /

குலவாய்ப்பட்டியில் கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்!

குலவாய்ப்பட்டியில் கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்!

குலவாய்ப்பட்டியில் கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்

குலவாய்ப்பட்டியில் கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்

Pudukkottai News | புதுக்கோட்டை மாவட்டம் எஸ். குலவாய்ப்பட்டியில் 14 ஆவது ஆண்டாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. நடமாடு போட்டி, கரிச்சான் மாடு போட்டி , பூஞ்சிட்டு மாடு போட்டி என 4 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் எஸ்.குலவாய்ப்பட்டியில் 14வது ஆண்டாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பேட்டையாளர்கள் மற்றும் ஊர் பொது மக்களால் நடத்தப்படும் இந்த மாட்டு வண்டி போட்டிகள், நடமாடு போட்டி, கரிச்சான் மாடு போட்டி , பூஞ்சிட்டு மாடு போட்டி என 4 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி, கரூர், மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகளுடன் வீரர்கள் கலந்து கொண்டனர். 4 பிரிவுகளில் முதல் பரிசாக முதல் பிரிவில் 50,000 ரூபாய், 2வது பிரிவில் 30,000 ரூபாய்,3வது பிரிவில்23,000 ரூபாய்,4வது பிரிவில் 22,000 ரூபாய் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன் நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் குதிரை வண்டி போட்டி நடைபெறும் என விழா கமிட்டியினர் தெரிவித்தனர்.

top videos
    First published:

    Tags: Local News, Pudukkottai