முகப்பு /புதுக்கோட்டை /

சீறிப்பாய்ந்த மாடுகள்.. பெருங்குடியில் கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்! 

சீறிப்பாய்ந்த மாடுகள்.. பெருங்குடியில் கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்! 

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Pudukkottai News : புதுக்கோட்டை மாவட்டம் பெருங்குடி கிராமத்தில் வேண்டி வந்த அம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பெருங்குடி கிராமத்தில் வேண்டி வந்த அம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே பெருங்குடி கிராமத்தில் வேண்டி வந்த அம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

பெரிய மாடு பிரிவில் 5 வண்டிகளும் அதே போன்று கரிச்சான் மாட்டு பிரிவில் ஏழு மாட்டு வண்டிகள் என 12 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இதில், பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் எட்டு கிலோ மீட்டர் தூரமும் கரிச்சான் மாட்டு பந்தயத்தில் 5 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எல்லையில் கொடியசைத்ததும் மாட்டு வண்டிகள் எல்லையை கடக்க ஒன்றன்பின் ஒன்றாக முந்தி சென்ற காட்சிகளை சாலையில் இருபுறமும் இருந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

top videos

    இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகளும் அதேபோன்று சிறப்பாக மாட்டு வண்டியை ஓட்டிய வீரர் சாரதிக்கு கொடி பரிசும் வழங்கப்பட்டன.

    First published:

    Tags: Local News, Pudukkottai