ஹோம் /புதுக்கோட்டை /

புடவை முதல் பழங்கள் வரை.. விராலிமலையில் அரசின் சார்பில் நடந்த வளைகாப்பு விழா.. நெகிழ்ந்த கர்ப்பிணி பெண்கள்

புடவை முதல் பழங்கள் வரை.. விராலிமலையில் அரசின் சார்பில் நடந்த வளைகாப்பு விழா.. நெகிழ்ந்த கர்ப்பிணி பெண்கள்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை - வளைகாப்பு விழா

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை - வளைகாப்பு விழா

Pudukottai News | புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமுதாய நலத்துறை சார்பாக 150  ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.                                               

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக 150 ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.

  இந்த வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு பூ மாலை அணிவிக்கப்பட்டு, அரசின் சார்பில் தாய் வீட்டு சீர்வரிசையும் வழங்கப்பட்டது. அதில் புடவை முதல் பழங்கள் வரை இருந்தன. பின்னர் அவர்களை நாற்காலியில் அமரவைத்து வளையல்கள் அணிவிக்கப்பட்டது. வளைகாப்பு நிகழ்ச்சியின் போது கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கப்படும் 5 வகையான சாப்பாடு பரிமாறப்பட்டது. தாய்வீட்டை போல மாநில அரசு செய்த இந்த சடங்கை பார்த்த பெண்கள் சற்றே உணர்ச்சி வசப்பட்டு காணப்பட்டனர்.

  சிறப்பு மருத்துவ முகாம்

  நிகழ்ச்சிக்கு பின்னர் அதில் பங்கேற்ற பெண்களின் ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொள்ள சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சிறிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. அதேபோல் எந்த வகையான உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அறிவுரை வழங்கப்பட்டது.

  மேலும் படிக்க: திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

  சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு:

  மேலும் விழா நடத்தப்பட்ட அங்கன்வாடி மையத்தில் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சிறுதானிய உணவு வகைகள் சுவைக்காக வைக்கப்பட்டு இருந்தன.  பிரமிடு வடிவத்தில் காய்கறிகள் அடுக்கப்பட்டு இருந்ததும், விலங்குகள் மற்றும் பறவைகளின் உருவங்களில் செதுக்கப்பட்டிருந்த காய்கறிகளும் காண்போரை கவரும் வகையில் அமைந்திருந்தது.

  கர்ப்பிணிகள் நெகிழ்ச்சி:

  இந்த விழாவில் கலந்து கொண்டது குறித்து கர்ப்பிணி பெண் குளோரி நான்சி கூறும்போது, “வளகாப்பு விழா எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. என்னுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்து கொண்டனர். மேலும் இங்கு நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் எந்த மாதிரி உணவை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெளிவான அறிவுரை வழங்கப்பட்டது.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும் எங்களது எண்ணங்களையும் மன ஓட்டங்களையும் புரிந்து செயல்படும் மாநில அரசுக்கு நன்றி” என்று பேசும் போதே உணர்ச்சி வயப்பட்டார் நான்சி.

  புதுக்கோட்டை - சினேகா விஜயன்

  Published by:Arun
  First published:

  Tags: Local News, Pudukkottai