விராலிமலை முருகன் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில் ஆனந்த நடனத்தை சிவபெருமான் ஆடி ஆருத்ரா தரிசன நாளாக சிவன் கோயிலில் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான சிவன் கோயில்களில் அதிகாலை முதல் ஆருத்ர தரிசன விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அந்த அந்த வகையில் விராலிமலை முருகன் மலைக்கோயில் ஆருத்ரா தரிசன விழா அடிவாரக் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக மலையிலிருந்து இறங்கி வந்த நடராஜர், சிவகாமசுந்தரி, நாரதா, மகாமுனி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
கிரிவலப்பாதையில் சுற்றி வரும்போது நாரதரின் கழகத்தால் நடராஜர் உடன் சிவகாமசுந்தரிக்கு ஊடல் ஏற்பட்டு கோபித்துக் கொண்டு பல்லக்கில் தனியே சென்று அடிவார மண்டபத்தில் அமர்ந்து விடுகிறார்.
இதனைத் தொடர்ந்து நடராஜரை கோயில் அடிவார மண்டபத்திற்கு அழைத்துச் சென்று சிவகாமசுந்தரியுடன் சமாதானம் செய்து வைப்பது போன்ற வைபவமும் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஆருத்ரா தரிசனத்தையும் சமாதான நிகழ்வையும் கண்டு களித்தனர்.
புதுக்கோட்டை - சினேகா விஜயன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Murugan temple, Pudukkottai, Viralimalai Constituency