ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் கைவினைஞர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்...

புதுக்கோட்டையில் கைவினைஞர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்...

கடனுதவி

கடனுதவி

TAMCO Loan | சிறுபான்மையின கைவினைஞர்கள் டாம்கோ (TAMCO) மூலம் கடனுதவி பெற  விண்ணப்பிக்கலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள சிறுபான்மையின கைவினைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் விரசாட் திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டிற்கு கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

Must Read :விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா?

இந்த திட்டத்தின் கீழ் ஏழ்மை நிலையில் உள்ள சிறுபான்மையினத்தை சார்ந்த கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்போர் ஆகியோரின் நிதி ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவ்வாறு பெறப்படும் கடன் தொகை 60 மாதத் தவணைகளில் திரும்ப செலுத்தப்பட வேண்டும். அதன்படி, கடன் பெற விண்ணப்பிக்க விரும்புவோர், இம்மாதம் 25ஆம் தேதிக்குள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில், முதல் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Loan, Local News, Pudukkottai