ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலை திருவிழா கோலாகலம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலை திருவிழா கோலாகலம்

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Pudukkottai District News : தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு வட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி நடத்த உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு வட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி நடத்த உத்தரவிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கலைத் திருவிழா நடைபெற்றது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையின் சார்பில் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது.

போட்டியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் துவக்கி வைத்தார். இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் மாணவ, மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு நடனமாடி தங்களது கலைத்திறன்களை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க : புதுக்கோட்டை மக்கள் கவனத்திற்கு.. உங்கள் செல்போனில் இந்த நம்பர்கள் இருக்கா?

வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் முதல் இரு தகுதிகள் பெறும் தனிநபர் குழுக்கள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கும், அடுத்து மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் தகுதி பெறும் தனிநபர், குழு மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர்.

மாநில அளவிலான கலைத்திருவிழா இறுதிப் போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ளது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. மேலும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட உள்ளது. மேலும் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

புதுக்கோட்டை செய்தியாளர் - சினேகா விஜயன்

First published:

Tags: Local News, Pudukkottai