ஹோம் /புதுக்கோட்டை /

நாளை புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

நாளை புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

மின்தடை பகுதிகள் அறிவிப்பு

மின்தடை பகுதிகள் அறிவிப்பு

Pudukkottai Power Cut | புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம் துணைமின் நிலையத்தில் நாளை  ( வியாழக் கிழமை) அக்டோபர்  27ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் துணைமின் நிலையத்தில் நாளை  (அக்டோபர் 27ஆம் தேதி) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் தங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : பொள்ளாச்சி ‘சூர்யவம்சம்’ வீட்டில் ஷூட் செய்யப்பட்டு மாபெரும் ஹிட்கொடுத்த படங்களின் லிஸ்ட்!

திருமயம், மணவாளங்கரை, இளஞ்சாவூர், ராமச்சந்திரபுரம், கன்னங்காரக்குடி, ஊனையூர், சவேரியார்புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மழை குடிப்பட்டி, மாவூர், கோனாபட்டு, துளையானூர், தேத்தான்பட்டி, வாரியப்பட்டி, கொள்ள காட்டுப்பட்டி பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல, ராங்கியம், கண்ணனூர், மேலூர், அம்மன் பட்டி, அரசம்பட்டி, லட்சுமிபுரம், எனப்பட்டி, விராச்சிலை பெல் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Pudukkottai