புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து குரூப் 2 தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கி வருகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் group 2 ( PRELIMINARY) முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு group 2 ( MAINS) முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : அடேங்கப்பா.... புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசலுக்கு இவ்வளவு பெருமைகளா!
மேலும் இப்பயிற்சியின்போது மாணவர்களுக்கு இலவச பாடக்குறிப்புகள், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள் வழங்கப்படுகிறது. அதேபோல் அவர்களின் திறனை மேம்படுத்த அவ்வப்போது மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் 23ம் தேதி முதல் இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர் கூறும்போது “நான் குரூப் 2 தேர்வுக்கு தயாராகிறேன். ஆனால் என்னால் தனியாக ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க வசதியில்லை. மாவட்ட நிர்வாகம் இந்த பயிற்சியை தற்போது எனக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
இதனால் நான் எளிதில் தேர்வுகளை சந்திக்க முடியும் என நம்புகிறேன். மாவட்ட நிர்வாகத்திற்கு என் நன்றிகள்” என கூறினார்.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. இதுபோன்ற பயிற்சி வகுப்புகளில் அவ்வப்போது நடைபெறும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதில் கலந்துகொள்ள decgc.pki@gmail.com மற்றும் 04322-222287 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை - சினேகா விஜயன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai