ஹோம் /புதுக்கோட்டை /

மீன் வளர்ப்பு திட்டத்தில் இவ்வளவு மானியமா?.. புதுக்கோட்டை மக்களே நீங்களும் தொழிலதிபராகலாம்!

மீன் வளர்ப்பு திட்டத்தில் இவ்வளவு மானியமா?.. புதுக்கோட்டை மக்களே நீங்களும் தொழிலதிபராகலாம்!

மீன் வளர்ப்பு

மீன் வளர்ப்பு

Pudukkottai District News | பிரதமரின் மீன் வளர்ப்பு திட்டத்தின் மானியங்கள், அதற்கான தகுதிகள் பற்றிய விவரங்களை புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

பிரதமரின் மீன் வளர்ப்பு திட்டத்தில் மானியங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியமும், பெண் பயனாளிகளுக்கு மற்றும்ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60சதவீதம் மானியமும் வழங்க கூடிய 7 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறும் சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் (குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம்) இருத்தல் வேண்டும். மீன்வளர்ப்பு, மீன் குஞ்சு வளர்ப்பிற்கு ஏற்ற நீர் ஆதாரம் இருத்தல் வேண்டும்.

கடந்த 2018-19 முதல் 2020-21 முடிய உள்ள ஆண்டு வரை உள்ள கால கட்டத்தில் மத்திய மாநில அரசிடமிருந்து உள்ளீட்டு மானியம் பெற்ற மீன் வளர்ப்பு விவசாயிகள் இந்த மானியம் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Must Read : போடிமெட்டு சுற்றுலா... மெய்மறக்க வைக்கும் இயற்கை அழகு! - தேனி டூரிஸ்ட் ஸ்பாட்

மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை வரும் 15ஆம் தேதிக்குள் புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அளிக்குமாறு அல்லது தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதற்கான அலுவலக முகவரி: மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், பிளாட் எண்.1 டவுன் நகரளவு எண்.233ஃ1, அன்னை நகர், நிஜாம் காலனி விஸ்தரிப்பு, புதுக்கோட்டை, தொலைபேசி எண் 04322 266994, அலைபேசி எண் 93848 24268  என புதுக்கோட்டை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Fish, Local News, Pudukkottai