முகப்பு /புதுக்கோட்டை /

மீண்டும் ஒரு கீழடி கண்டுபிடிப்பு..! பொற்பனைக்கோட்டையில் அகழ்வாய்ராய்ச்சி பணிகள் தொடக்கம்..!

மீண்டும் ஒரு கீழடி கண்டுபிடிப்பு..! பொற்பனைக்கோட்டையில் அகழ்வாய்ராய்ச்சி பணிகள் தொடக்கம்..!

X
பொற்பனைக்கோட்டையில்

பொற்பனைக்கோட்டையில் அகழ்வாய்ராய்ச்சி பணிகள் தொடக்கம்

Archaeological work starts in Porpanaikottai | பொற்பனைக்கோட்டை பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொற்பனைக்கோட்டை பழமையான முற்றிலும் சிதிலமடைந்த செங்கல்லாலான கோட்டையாகும். பொன் பரப்பினான்பட்டி என்ற பண்டையப் பெயர் பொற்பனைக் கோட்டை என மாறி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

எங்கு அமைந்துள்ளது?

புதுக்கோட்டைக்கு கிழக்கே சுமார் 6 கி.மீ தொலைவில் பொற்பனைக்கோட்டை உள்ளது.

இந்த கோட்டையானது சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவி்ல் காணப்படுகிறது. இதைத் சுற்றி இடிந்த நிலையில் மதில்சுவர் செங்கற்கள் நிறைந்து காணப்படுகின்றன. கோட்டையைச் சுற்றி 4 நுழைவாயில்கள் இருந்ததற்கான தடயங்களும் உள்ளன.

கோட்டையானது மதில் சுவர்களுக்கு மையத்தில் வட்ட வடிவில் இருந்ததற்கான சுவடுகள் காணப்படுகின்றன.

இதனை அரண்மனைத்திட்டு என்று உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். இங்கே கோட்டை கொத்தளம் இருந்ததற்கான சுவடுகளுடன் அகழிகளும் உள்ளன. இந்த பொற்பனை கோட்டை குறித்த மேலும் விளக்கத்தை புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பனையூர் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் ராஜேந்திரன் பகிர்ந்துகொண்டார்.

பொற்பனைக்கோட்டையில் அகழ்வாய்ராய்ச்சி பணிகள் தொடக்கம்

சோழ - பாண்டிய தேசங்கள் இணைப்பு

இதுகுறித்து அவர் கூறுகையில், “புதுக்கோட்டை சோழ நாட்டிற்கும், பாண்டிய நாட்டிற்கும் இடைப்பட்ட எல்லை சந்திக்கும் இடமாக இருந்துள்ளது. சங்க காலத்தில் இருந்தே, சோழர்களின் ஆதிக்கமும் பாண்டியர்களின் ஆதிக்கமும் புதுக்கோட்டையில் இருந்துள்ளன. மேலும் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டையில் தான் அதிகமான கல்வெட்டுகள் கிடைத்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : நெல்லையில் இலங்கை தமிழர்களுக்காக 3 இடங்களில் கட்டப்படும் 194 வீடுகள்.. எங்கு தெரியுமா?

இவ்வளவு சிறப்பு பெற்ற புதுக்கோட்டையின் கிழக்கில் அமைந்துள்ள பொற்பனைக்கோட்டையில் 10 இன்ச் அகலமும் 8 இன்ச் நீளமும் கொண்ட செங்கல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கோட்டையானது சங்க கால கோட்டை என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டை 2000 வருடங்களுக்கு முற்பட்ட கோட்டை என்றும் தெரியவருகிறது. மௌலியர்களின் கோட்டைக்கு அடுத்தபடியாக இந்த பொற்பனைக்கோட்டையை நாம் கூற முடியும்.

கொத்தளங்கள் கண்டுபிடிப்பு

மேலும் வீரர்கள் பதுங்கி இருக்கும் கொத்தளங்கள் இருந்ததற்கான அடையாளங்களையும் இங்கே பார்க்க முடிகிறது. மேலும், வெளிப்புறங்களிலும் உட்புறங்களிலும் அகழிகள் இருந்ததற்கான சான்றுகளையும் பார்க்க முடிகிறது. மேலும் மக்களுக்கு பயன்படுத்தப்படும் வகையில் நீராவி குளமும் அங்கு அமைந்ததற்கான சான்றுகளும் கிடைத்ததாகவும், மேலும் இந்த பகுதியில் பழமையான வண்ணங்களால் ஆன பானை ஓடுகள், களிமண்ணால் செய்யப்பட்ட அணிகலன்கள், வட்டமாகவும், நீளமாகவும் நூற்றுக்கு மேற்பட்ட சுடுமண் வார்ப்புக்குழாய்கள் என பல பொருட்கள் கிடைத்துள்ளன.

அந்த வகையில், தமிழ்நாட்டின் முக்கிய இடமாக இது கருதப்படுகிறது. எனவே, இங்கே அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த பகுதியில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அனுமதி அளித்த மத்திய அரசு

எனினும் மத்திய, மாநில அரசுகள் இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், பொற்பனைக்கோட்டை பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, இங்கே நவீன தொழில்நுட்பக் கருவிகளை கொண்டு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இதனால், பல அரிய தகவல்கள் நமக்கு தெரியவரும்” என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Pudukkottai