Home /pudukkottai /

ஒதுங்க இடமில்லாமல் திண்டாடும் பயணிகள்.. இத்தனை பேர் வந்துபோகும் ஆலங்குடி பேருந்து நிறுத்தத்தில் இப்படி ஒரு அவலமா...

ஒதுங்க இடமில்லாமல் திண்டாடும் பயணிகள்.. இத்தனை பேர் வந்துபோகும் ஆலங்குடி பேருந்து நிறுத்தத்தில் இப்படி ஒரு அவலமா...

ஆலங்குடி,

ஆலங்குடி, புதுக்கோட்டை

Pudukkottai District News | புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் உள்ள அரசமரம் பேருந்து நிறுத்தத்தை நோயாளிகள், பெண்கள், மாணவ மாணவிகள் என தினசரி ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் நிலையில் நிழற்குடை இல்லாமல் பயணிகள் பரிதவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai
புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது ஆலங்குடி பேரூராட்சி. ஆலங்குடி பேரூராட்சியானது ஆலங்குடி சட்டமன்ற தொகுதி, ஆலங்குடி வருவாய் வட்டம், ஆலங்குடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உட்கோட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகளின் தலைமை இடமாக விளங்கி வருகிறது.

இந்த ஆலங்குடி நகரின் முக்கிய பேருந்து நிறுத்தங்களில் ஒன்றாக விளங்கி வரும் ஆலங்குடி அரசமரம் பேருந்து நிறுத்தத்தை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அரசமரம் பேருந்து நிறுத்தத்தை ஒட்டி பல முக்கிய மருத்துவமனைகள், பிரதான வணிக நிறுவனங்கள் இருப்பதால் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் நோயாளிகளும் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் அருகில் இருக்கும் கல்லூரிக்கு சென்று வரும் மாணவிகளும் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் கூட்டம் இப்பகுதியில் அலைமோதும்.

இதையும் படிங்க:  திங்கள்தோறும் களைகட்டும் ஆலங்குடி, அறந்தாங்கி சுற்றுவட்டார கிராமங்களின் ஏலக்கடைகள்..

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்தும் ஆலங்குடி அரச மரம் பேருந்து நிறுத்தத்தில் உரிய பேருந்து நிழற்குடை அதாவது பயணிகள் அமரக்கூடிய நிழற்குடை ஒன்று இல்லை என்பது அப்பகுதியை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பல ஆண்டுகால ஏக்கமாக இருந்து வருகிறது.

மருத்துவமனைகளுக்குச் சென்று வரும் நோயாளிகள் கல்லூரிகளுக்குச் சென்று திரும்பும் மாணவிகள் என சோர்வாக திரும்பி பேருந்திற்கு காத்திருக்கும் நேரத்தில் அதிகபட்ச வெயில் மற்றும் மழை காரணமாக அப்பகுதியில் மழை மற்றும் வெயிலில் காத்திருந்து பேருந்தில் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அப்பகுதியில் ஒரு பேருந்து பயணியர் நிழற்குடை அமைத்து தரவேண்டும் எனவும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க:  பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் புதுக்கோட்டை அறம்வளர்த்த நாயகி திருக்கோவில்- சிறப்புகள் தெரியுமா?

ஆனால் அரசமரம் பகுதியிலிருந்து பேருந்துகள் ஒரு வழிச்சாலையாக இரண்டு வழிகளில் பிரிந்து சென்று வரும் நிலையில், அரசமரத்தின் மேற்குப் புறத்தில் பாதிப் பயணிகளும், கிழக்குப் புறத்தில் பாதிப் பயணிகளும் காத்திருக்கின்றனர்.
மேற்குப் புறத்தில் காத்திருக்கும் பயணிகள் அங்குள்ள வங்கிக் கிளையின் முன்னர் இருக்கும் படிக்கட்டிலும், பூக்கைடையின் ஓரங்களிலும் காத்திருந்து சிரமத்துடன் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.

இதுகூட  பரவாயில்லை எனும் அளவிற்கு இருக்கிறது அரசமரத்தின் கிழக்குப் புறம் காத்திருக்கும் பயணிகளின் நிலை,
அரசமரத்தின் கிழக்குப் புறத்தில் உணவகம், தேநீரகம், பெட்டிக்கடை, பேக்கரி என அனைத்தும் வணிக நிறுவனங்களாக இருப்பதால் அப்பகுதியில் காத்திருக்கவே பொதுமக்கள் மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கிறது. அத்தோடு கடைகளை ஒட்டி நிற்க சங்கோஜப்பட்டு பல பயணிகள் அங்கு நிற்கும் நேரத்திற்காகவே அந்தந்த கடைகளில் ஏதேனும் பொருட்களை வாங்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டி இருக்கிறது.

இதையும் படிங்க:  செவிவழிச் செய்தி மூலம் நூற்றாண்டுகள் பழமையான சிவாலயத்தை கண்டறிந்து புணரமைத்த புதுகை மக்கள்

இது போன்ற நடைமுறை சிக்கல்களை தினசரி ஆலங்குடி அரசமரம் பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயணிகளும் எதிர்கொள்கின்றனர். அரச மரத்தின் அடியில் நிழலில் நிற்கலாம் என்றால், அங்கு  ஆட்டோக்களை நிறுத்தி வைத்து ஸ்டேண்டாக மாற்றி இருப்பதால், நிழலுக்காக கூட பயணிகளை அந்தப் பக்கத்தில் அனுமதிப்பதில்லை ஆட்டோ ஓட்டுனர்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இத்தனைக்கும், அந்த இடத்தில் மூன்று சாலைகளும் சந்திக்கும் இடத்தில் தான் ஆலங்குடி நகர காவல்துறையின் கண்காணிப்பு கோபுரமும் அமைந்திருக்கிறது. பேரூராட்சி நிர்வாகமும் மக்களின் இந்த சிரமத்திற்கு செவிக்கு எட்டாதது போலவே பல ஆண்டுகளாக இருந்து வருவதாகவும், ஆலங்குடிக்கு வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரக் கூடிய சூழலில் இனியேனும் பேரூராட்சி நிர்வாகம் செவி மடுத்து இந்த அரச மரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் புதிய பயணியர் நிழற்குடை ஒன்றை அமைத்துத் தர வேண்டும் என பயணிகளும், ஆலங்குடி பொதுமக்களும் கோரிக்கையோடு நிற்கின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Pudukkottai

அடுத்த செய்தி