Home /pudukkottai /

திங்கள்தோறும் களைகட்டும் ஆலங்குடி, அறந்தாங்கி சுற்றுவட்டார கிராமங்களின் ஏலக்கடைகள்..

திங்கள்தோறும் களைகட்டும் ஆலங்குடி, அறந்தாங்கி சுற்றுவட்டார கிராமங்களின் ஏலக்கடைகள்..

புதுக்கோட்டை

புதுக்கோட்டை விவசாயிகளுக்கு கைகொடுக்கும் ஏலக்கடைகள்..

Pudukottai District News | புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் இரவு நேர ஏலக்கடைகள் என்பது ஐந்து வருடங்களுக்கு முன்னர் வரை திருவிழாக் கூட்டம் போல காட்சியளித்து வந்தன. இவற்றின் இன்றைய நிலை எப்படி என அறியலாமா..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai
புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட தாலுகாவிற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டத்தில் தினசரி விளையும் காய்கறிகளை அருகாமையில் உள்ள பெரிய கிராமங்களின் கடைத்தெருக்களில் இரவு நேரத்தில் நடைபெறும் ஏலக்கடைகளில் வைத்து ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் செலவுகளை மேற்கொள்ளுவார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தினசரி களைகட்டிய இந்த ஏலக்கடைகள், கஜா புயல் பாதிப்பு மற்றும் கொரோனா பாதிப்புகள் காரணமாக அழியும் தருவாயிற்கு வந்து விட்டன என்றே சொல்லலாம். ஆனால் தற்போது சற்று மீண்டும் உயிர்த்து எழத் தொடங்கி இருக்கிறது விவசாய ஏலக்கடைகள்.

செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் அறந்தாங்கி வாரச் சந்தை, வியாழன் அன்று நடைபெறும் ஆலங்குடி வாரச் சந்தை மற்றும் ஞாயிறு நடைபெறும் பேராவூரணி வாரச்சந்தைகளுக்கு வியாபரத்திற்காக வியாபாரிகள் காய்கறிகளை ஏலக்கடைகளில் ஏலம் எடுக்க அதிக அளவில் வருவதால் அதற்கு முந்தைய நாள் இரவு களைகட்டுகிறது ஏலக்கடைகள்.

புதுக்கோட்டை விவசாயிகளுக்கு கைகொடுக்கும் ஏலக்கடைகள்..


இதையும் படிங்க:  பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் புதுக்கோட்டை அறம்வளர்த்த நாயகி திருக்கோவில்- சிறப்புகள் தெரியுமா?

அறந்தாங்கி வாரச் சந்தையை ஒட்டி கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள ஏலக்கடை ஒன்றில் குவிந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் கூட்டத்தைக் கண்ட நாமும் என்னதான் நடக்குதுனு பாப்போம்னு உள்ளே நுழைந்தோம்.

தங்களது தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை ப்ரஷ்ஷா சாயந்தரமா பறிச்சு கொண்டு வந்து ஏலக்கடைகளில் மூட்டைகளாகவும், கூடைகளிலும், கூறுகளாகவும் விவசாயிகள் வைத்திருந்தனர்.

புதுக்கோட்டை விவசாயிகளுக்கு கைகொடுக்கும் ஏலக்கடைகள்..


ஏலக்கடை உரிமையாளரும், ஏலம் விடக்கூடிய நபர்களும் அன்றைய சந்தை நிலவரப்படி குறிப்பிட்ட விலையிலிருந்து ஏலத்தை தொடங்கி அதிகபட்ச ஏலத் தொகைக்கு கேட்ட வியாபாரிகளின் பேரில் ஏலத்தை முடிச்சு வைச்சுட்டு இருந்தாங்க. ஏலத்துல எடுத்த காய்கறிகளின் மூட்டைகளில் தங்களது பெயரை எழுதி வியாபாரிகள் தனித் தனியா எடுத்து வெச்சிட்டு இருந்தாங்க.

புதுக்கோட்டை விவசாயிகளுக்கு கைகொடுக்கும் ஏலக்கடைகள்..


கொத்தமங்கலம் சுற்றுவட்டாரத்துல எழுமிச்சை, வெண்டை, கத்தரி, வாழைப்பூ, சுண்டைக்காய், வாழைத்தார் என பல வகையான காய்கறிகள் விளைவிக்கப்படுறதால அந்த காய்கறிகளை எல்லாம் ஏலத்துல விட்டுட்டு இருந்ததை எல்லாம் காண கண் கோடி வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நேரடியாக வியாபாரிகள் கிட்ட குடுக்குறதை விட ஏலக்கடைகளில் சற்றே லாபம் அதிகமா இருக்குன்றது தான் விவசாயிகள் மீண்டும் ஏலக்கடைகளை நோக்கி வரக் காரணமா இருக்கு.
அதேபோல காய்கறிகள் மறுநாள் விற்க முதல்நாள் பறிக்கப்பட்டதால ரொம்ப ப்ரஷ்ஷா இருக்குன்றது தான் வியாபாரிகள் ஏலக்கடையைத் தேடி வரக் காரணம்.
Published by:Arun
First published:

Tags: Local News, Pudukkottai

அடுத்த செய்தி