முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்ரல் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை.. எதற்கு தெரியுமா?

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்ரல் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை.. எதற்கு தெரியுமா?

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Pudukkottai News | புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதையொட்டி ஏப்ரல் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, நார்த்தாமலை கிராமம் , நார்த்தாமலை முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஏப்ரல் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்கு 29.04.2023 சனிக்கிழமை அன்று பணி நாள் எனவும் வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 30.04. 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பணி நாள் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

First published:

Tags: Holiday, Local News, Pudukkottai