Home /pudukkottai /

பி.எம். கிசான் உதவித்தொகை திட்டம் : புதுக்கோட்டை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பி.எம். கிசான் உதவித்தொகை திட்டம் : புதுக்கோட்டை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பிஎம் கிசான் திட்டத்தில் பதிவை புதுப்பிக்க அறிவுறுத்தல்

பிஎம் கிசான் திட்டத்தில் பதிவை புதுப்பிக்க அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான (பி.எம். கிசான்) திட்டத்தில் தொடர்ந்து ஊக்கத்தொகை பெற,  தங்கள் பதிவை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
பிஎம் கிசான் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் வரும் 15-ம் தேதிக்குள் தங்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும் என  புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) சக்திவேல் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின்  விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் தற்போது தங்களது பெயரில் நேரடி நிலமுள்ள சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டிற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இதுவரை 11 தவணை ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் ஊக்கத்தொகையானது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்படும். எனவே தொடர்ந்து ஊக்கத்தொகையினை பெற்றிட விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் நில ஆவணங்களை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களிடம் கொடுத்து தங்கள் நில விவரங்களை செயலியில் வருகிற 15ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : ஆசியாவிலேயே மிகப் பெரிய குதிரை சிலையைக் கொண்ட ஐய்யனார் கோவில் சிறப்புகள் தெரியுமா? 


ஆதார் விவரத்தினை சரிப்பார்த்து இ-கே.ஓய்.சி (e-KYC) செய்து பதிவை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் ஆதார் அட்டை மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள    கைபேசியுடன் பொது சேவை மையங்கள் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இ-கே.ஓய்.சி செய்து ஆதார் விவரத்தினை உறுதி செய்யலாம்.

மேலும், கூடுதல் விவரங்களு க்கு விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களின் வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு இ-கே.ஓய்.சி புதுப்பித்து, தங்கள் நில விவரங்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை பெற முடியும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் இதனை செய்ய தவறினால் ஊக்கத்தொகை அரசால் நிறுத்தப்படும். எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் உடனடியாக இ-கே.ஓய்.சி மற்றும் நில விவரங்கள் பதிவு  செய்யுமாறு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) சக்திவேல் அறிவுறுத்தியுள்ளார்.
Published by:Lakshmanan G
First published:

Tags: Local News, Pudukottai

அடுத்த செய்தி