ஹோம் /புதுக்கோட்டை /

தேசிய பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்ற 8 வயதேயான புதுக்கோட்டை சிறுவன்..!

தேசிய பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்ற 8 வயதேயான புதுக்கோட்டை சிறுவன்..!

X
தேசிய

தேசிய பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்ற சிறுவன்

Pudukkottai District News : சர்வதேச பேட்மிட்டன் போட்டிக்கு தேர்வாகியுள்ளார் புதுக்கோட்டையை சேர்ந்த 8 வயது மாணவர் தருண்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, நல்லம்பல் சமுத்திரம் வட்டம், நம்பூரணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கணேசமூர்த்தி- சுதா தம்பதியரின் இளைய மகன் தருண் தேசிய அளவில் நடைபெற்ற பேட்மிட்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

8 வயதான சிறுவன் தருண் குழந்தையாக இருந்தபோதே பேட்மிட்டன் போட்டிகள் மற்றும் கால்பந்து போட்டிகளில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தான். தருணின் ஆர்வத்தை கண்டு கொண்ட பெற்றோர்கள் அவன் திறமையை மேலும் வளர்க்க அவனை பேட்மிட்டன் பயிற்சியில் சேர்த்துள்ளனர்.

பயிற்சியில் சேர்ந்து மூன்றே மாதத்தில் தேசிய அளவிலான பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்று அதில் முதல் இடத்தையும் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மேலும் சர்வதேச அளவிலான போட்டிக்கும் தருண் தேர்வாகியுள்ளார். பின்னர் தேசிய பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்ற தங்கப்பதக்கத்துடன் தமிழகம் திரும்பியுள்ளான் தருண்.

இதையும் படிங்க : மீன்வளத்துறையின் அறிவிப்பை ஏற்று கடலுக்கு செல்லாத கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள்..

தற்போது சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு வந்துள்ளது. சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறான் 8 வயது சிறுவன் தருண். வெறும் மூன்று மாத பயிற்சியில் சர்வதேச அளவிற்கு சென்று உள்ளது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தருணின் தாயார்  சுதா கூறுகையில்,”சிறு வயது முதல் பேட்மிட்டன் மற்றும் கால்பந்து ஆகியவற்றை ஆர்வத்துடன் விளையாடி வந்தான் அதனைப் பார்த்த பின் மேலும் பயிற்சி கொடுத்தால் இன்னும் கற்றுக் கொண்டு மேலே வருவான் என்று நினைத்து அவனை பேட்மிட்டன் பயிற்சியில் சேர்த்தோம்,

பயிற்சி பெற்ற வெறும் மூன்று மாதத்தில் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு தன் திறனை வளர்த்துக் கொண்ட தருணை பார்க்கும்போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது.”என்றார்.

இதெல்லாம் தேவையில்லாத வேலை என்று சிலர் கூறியிருந்த வேளையிலும் தனது பிள்ளையின் ஆர்வத்தை கண்டு நிச்சயம் தன் பிள்ளை சாதிப்பான் என்று அவன் திறமையை நம்பி எந்த தளர்வும், சோர்வும் இல்லாமல் தொடர் பயிற்சியில் சிறுவனை ஈடுபடுத்தி வந்துள்ளார் தருணின் தாயார் சுதா.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சர்வதேச போட்டிக்கு தயாராகும் சிறுவன் தருண் பேசுகையில் “இன்னும் நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் நிச்சயமாக பதக்கங்களை வென்று தருவேன் ” என்று தன்னடக்கத்துடன் கூறிவிட்டு பயிற்சியில் மீண்டும் இறங்கினான் சிறுவன். நிறைகுடம் கூத்தாடாது அல்லவா.

புதுக்கோட்டை செய்தியாளர் - சினேகா விஜயன்

First published:

Tags: Local News, Pudukkottai