முகப்பு /புதுக்கோட்டை /

சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்று 8 வயது புதுக்கோட்டை சிறுவன் சாதனை..

சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்று 8 வயது புதுக்கோட்டை சிறுவன் சாதனை..

X
தங்கம்

தங்கம் வென்ற சிறுவன்

Pudukkottai | புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் பேட்மின்டன் சர்வதேச அளவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளான்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, நம்பூரணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கணேசமூர்த்தி- சுதா தம்பதியரின் இளைய மகன் தருண். நேபாளில் சர்வதேச அளவில் நடைபெற்ற பேட்மிட்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளான்.

8 வயதான சிறுவன் தருண் குழந்தையாக இருந்த போதே பேட்மிட்டன் போட்டியில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தான். தருணின் ஆர்வத்தை கண்டு கொண்ட பெற்றோர்கள் அவன் திறமையை மேலும் வளர்க்க அவனை பேட்மிட்டன் பயிற்சியில் சேர்த்துள்ளனர்.

பயிற்சியில் சேர்ந்து மூன்றே மாதத்தில் தேசிய அளவிலான பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்று அதில் முதல் இடத்தையும் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளான். தற்போது சர்வதேச அளவிலான போட்டியிலும் தருண் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளான். வெறும் மூன்று மாத பயிற்சியில் சர்வதேச அளவிற்கு சென்று வென்றுள்ளது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசிய தருணின் தாயார்,”சிறு வயது முதல் பேட்மிட்டன் மற்றும் கால்பந்து ஆகியவற்றை ஆர்வத்துடன் விளையாடி வந்தான். அதனைப் பார்த்த பின் மேலும் பயிற்சி கொடுத்தால் இன்னும் கற்றுக் கொண்டு மேலே வருவான் என்று நினைத்து அவனை பேட்மிட்டன் பயிற்சியில் சேர்த்தோம்.

பயிற்சி பெற்ற வெறும் மூன்று மாதத்தில் சர்வதேச போட்டியில் தங்கம் வெல்லும் அளவுக்கு தன் திறனை வளர்த்துக் கொண்ட தருணை பார்க்கும்போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது என்றும் மேலும் அடுத்து தாய்லாந்தில் நடக்க உள்ள போட்டிக்கும் தருண் செல்ல உள்ளான் என்றும் தெரிவித்தார்.

‘நெல்லுக்குப் பின் பயறு சாகுபடி’ - புதுக்கோட்டையில் உளுந்து விதைகள் மானியத்தில் விற்பனை

சர்வதேச அளவில் தங்கப் பதக்கம் வென்ற சிறுவன் தருண் பேசுகையில் இது மட்டுமின்றி “இன்னும் நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் நிச்சயமாக அதிக அளவில் பதக்கங்களை வென்று தருவேன் ” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தான்.

First published:

Tags: Local News, Pudukkottai