முகப்பு /புதுக்கோட்டை /

பெண் வீட்டார் சீர் கொண்டு வர விமரிசையாக ஆலங்குடியில் நடைபெற்ற அம்பாள் ஈசன் திருமணம்...

பெண் வீட்டார் சீர் கொண்டு வர விமரிசையாக ஆலங்குடியில் நடைபெற்ற அம்பாள் ஈசன் திருமணம்...

X
திருக்கல்யாண

திருக்கல்யாண வைபவத்தில் அருள்பாலிக்கும் சுவாமி 

Pudukkottai News| ஆலங்குடி  ஶ்ரீ தர்மஸம்வர்த்தினி சமேத  நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் ஈசன் மற்றும் அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ தர்மசம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோயில். இங்கு சிவ பார்வதி திருக்கல்யாணத்தை முன்னிட்டு தேரோடும் வீதியிலே பட்டினப் பிரவேசமும், மல்லாரி இசைக்க கீர்த்தனை கலை நிகழ்ச்சியுடன் பரதநாட்டிய அரங்கேற்றமும் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத் தொடர்ந்து பெண் வீட்டு சீர் வரிசைகளை ஆலங்குடி நாடியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக நாமபுரீஸ்வரர் திருக்கோவிலை வந்தடைய, ராஜகோபுரத்தின் முன்னதாக மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து சீர்வரிசைப் பொருட்களுக்கு பூஜை நடைபெற்று. அதன் பின்னர் கோவிலின் வளாகத்தில் ஈசனுக்கும், அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தேறியது. இதையடுத்து அம்பாளும் ஈசனும் சமேதர்களாக வீதி உலா வந்தனர். இந்த திருக்கல்யாண வைபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை தரிசித்து சென்றனர்.

top videos
    First published:

    Tags: Local News, Pudukottai