ஹோம் /புதுக்கோட்டை /

அனைத்து தோஷங்களையும் நீங்கும் கந்தர்வகோட்டை ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில் - சிறப்புகள் என்ன?

அனைத்து தோஷங்களையும் நீங்கும் கந்தர்வகோட்டை ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில் - சிறப்புகள் என்ன?

கோதண்டராமன் கோவில்

கோதண்டராமன் கோவில்

Pudukkottai District | புதுக்கோட்டை மாவட்டத்தில் ராமனுக்கு சோழ மன்னன் எழுப்பிய கந்தர்வகோட்டை ஸ்ரீ கோதண்ட ராமர் கோவிலைப் பற்றியும், அதன் சிறப்புக்கள் குறித்தும் காணலாம்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள ஸ்ரீ கோதண்ட ராமர் கோவிலில் ஸ்ரீ கோதண்ட ராமர் சீதா தேவி, லட்சுமணர் சமேதமாக காட்சியளிக்கிறார். இந்த ராமரை தரிசித்தாலே நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

சோழ மன்னரான கண்டராதித்தன் கட்டிய கோவிலான இது, பிற்காலத்தில் புதுக்கோட்டை பகுதியை ஆண்ட தொண்டைமான் மன்னர் இந்த கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்திருப்பதாக கல்வெட்டு குறிப்புக்கள் காணப்படுகின்றன. கண்டராதித்த சோழன் இந்த கோவிலில் சிற்பமாகக் செதுக்கப்பட்டுள்ளார்.

இந்த கோவிலில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் மற்றும் வைணவ ஆச்சார்யர்களுக்கு சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் ஆச்சர்ய நிகழ்வாக, ஒவ்வொரு மாதமும் வரும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் காலையில் சூரியனின் ஒளி கோதண்ட ராமரின் காலை தொட்டு செல்கிற முறையில் சோழர்கள் காட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. இது வியக்கவைக்கும் கட்டிடக்கலையாக இருப்பதாக கூறுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த கந்தர்வகோட்டை கோவிலில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

Must Read : கன்னியாகுமரிக்கு டூர் போறீங்களா? அழகான இந்த அருவியை மிஸ் பண்ணாதீங்க!

இங்குள்ள ஆஞ்சநேயருக்கு தொடர்ந்து 11 சனிக்கிழமைகள் நெய்விளக்கேற்றி, திருமஞ்சனம் செய்து தயிர் சாதம் அல்லது வடைமாலை சாற்றி வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள்.

First published:

Tags: Local News, Pudukkottai, Temple