முகப்பு /புதுக்கோட்டை /

96 பட பாணியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.. புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்!

96 பட பாணியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.. புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்!

முன்னாள் மாணவர்கள்

முன்னாள் மாணவர்கள்

Pudukkottai alumni meet | புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 30 ஆண்டுகள் முன்பு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம்விராலிமலையில்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்களது படிப்பை முடித்து அரசு மற்றும் தனியார் துறைகளில் அதிகாரிகளாகவும், தொழிலதிபர்களாகவும் வளர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 1992-1994 வருடங்களில் வரலாற்று பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் "92 - 94வரலாற்றுபிரிவு மாணவர்கள்" என்ற பெயரில் வாட்ஸ்அப்குழு ஒன்றை ஏற்படுத்தி இப்பள்ளியில் படித்த மாணவர்களை ஒன்றிணைத்தனர். அதனைத் தொடர்ந்து முன்னாள்வரலாற்றுபாட மாணவர்களின் சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்குபள்ளி தலைமை ஆசிரியர் சிவலிங்கம் தலைமை வகித்தார். ஓய்வுபெற்றதமிழ்பேராசிரியர்சந்தானமூர்த்தி, வரலாற்று ஆசிரியர் துரைக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் மாணவ, மாணவியர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் மூலம் ஒவ்வொரு வரும் பழைய நண்பர்களை சந்தித்து தங்கள் நிகழ்வுகளையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்துகொண்டனர். மேலும் ஒருவருக்கொருவர் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் தாங்கள் படிக்கும்போது பணியாற்றிய ஆசிரியர்களுக்குநினைவுபரிசுகளை வழங்கி கவுரவித்தனர். முன்னதாக வரலாற்று ஆசிரியர் பழனிச்சாமி வரவேற்றார் முன்னாள் மாணவர் சரவணன் நன்றி கூறினார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Pudukkottai