முகப்பு /புதுக்கோட்டை /

புதுகை ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழா.. முளைப்பாரி எடுத்த பெண்கள்..

புதுகை ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழா.. முளைப்பாரி எடுத்த பெண்கள்..

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழா

Alankudi Sri Vengadajalapathi Temple : புதுக்கோட்டை ஆலங்காடு கிராமத்தில் ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு  முளைப்பாரி எடுப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 

  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேகம்நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கிராம பெண்கள் 7 நாட்கள் விரதம் இருந்து தொட்டியில் நவதானிய விதைகளை போட்டு வளர்த்து வந்தனர்.

இந்நிலையில், அதனை தலையில் சுமந்தவாறு கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் சுற்றி பாரம்பரிய முறைப்படி கும்மி அடித்தும், குலவையிட்டும் வான வேடிக்கைகள் முழங்க மேளதாளங்களுடன் கோவில் வந்தடைந்தனர்.

முளைப்பாரி எடுத்து செல்லும் பெண்கள்

இதையும் படிங்க : அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!

இவ்வாறு முளைப்பாரி எடுத்து நல்ல மழை பொழிவு வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், ஊர் நலம் பெற வேண்டியும் ஸ்ரீ வேங்கடாஜலபதியை வழிபட்டுச் சென்றனர். இந்த முளைப்பாரி எடுப்பு விழாவில் ஆலங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வேங்கடாஜலபதி அருள் பெற்று சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Pudukkottai, Religion18