Home /pudukkottai /

கடலை, அரிசி ஆலைகளில் இருந்து வெளியேறும் மாசு.. தூசி படலமாக மாறிப்போன ஆலங்குடி..!!

கடலை, அரிசி ஆலைகளில் இருந்து வெளியேறும் மாசு.. தூசி படலமாக மாறிப்போன ஆலங்குடி..!!

புதுக்கோட்டை

புதுக்கோட்டை - தூசி படலமாக மாறிப்போன ஆலங்குடி..!!

Pudukkottai District Latest News | புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் கல்லாலங்குடி பகுதிகளில் இயங்கி வரும் கடலை மற்றும் அரிசி ஆலைகளில் இருந்து வெளியேறும் மாசு காரணமாக அப்பகுதி முழுவதும் தூசு மண்டலமாக காட்சி தருகிறது..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகர் மற்றும் கல்லாலங்குடி பகுதியில் இயங்கி வரும் அரிசி மற்றும் கடலை ஆலைகளில் இருந்து வெளியேறும் மாசுக்களால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.  

ஆலங்குடி நகர் மற்றும் கல்லாலங்குடி பகுதியில் பல ஆண்டுகளாக நகரின் பல பகுதிகளில் அரிசி  மற்றும் கடலை ஆலைகள்  இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் மாசுக்களால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர். மேலும் இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் மாசுக்கள் வாகன ஓட்டிகளை சிரமப்படுத்துவதால் அடிக்கடி விபத்தும் நடைபெறுவதாக கூறப்படுகிறது. கூடுதலாக வீடுகளில் இருக்கும் பாத்திரங்கள், உணவுகள் உள்ளிட்ட அன்றாட தேவைக்குரிய அனைத்து விஷயங்களின் மீதும் இந்த தூசிகள் படிவதால் ஆலங்குடி நகர பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஆலை உரிமையாளர்களும் தொழில் செய்ய வேண்டும் எனவும் தாங்களும் நிம்மதியாக வாழவேண்டும் எனவும் அதற்காக உரிய நடவடிக்கை எடுத்து இந்த பிரச்னையை உடனடியாக சரி செய்து தரவேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர் ஆலங்குடி நகரப் பொதுமக்கள்.

இதையும் படிங்க:  முக்காலி மூலம் திருடனை கண்டறியும் கிராம மக்கள்.. புதுக்கோட்டையில் விநோதம்..

வீடுகள் மட்டுமின்றி இந்த ஆலையை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மரங்கள், செடிகள், தாவரங்கள் மற்றும் சாலைகள், கட்டிடங்கள் என அனைத்தும் தூசி படிந்து மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகின்றன. இந்த சூழ்நிலை காரணமாக ஆலங்குடி நகரில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுக்குழாய் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த நிலை நீடிக்காமல் பேரூராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் இந்த சம்பவத்தில் தலையிட்டு மக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், ஆலை உரிமையாளர்களின் தொழிலுக்கும் பாதகம் இன்றி உரிய நடவடிக்கை எடுத்து இரண்டு தரப்பும் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Pudukkottai

அடுத்த செய்தி