ஹோம் /புதுக்கோட்டை /

விராலிமலையில் துணிவு படம் வெளியானதை கொண்டாடி தீர்த்த அஜித் ரசிகர்கள் 

விராலிமலையில் துணிவு படம் வெளியானதை கொண்டாடி தீர்த்த அஜித் ரசிகர்கள் 

X
திரையரங்குகளில்

திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் 

விராலிமலை ஜோதி திரையரங்கில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் அதிகாலை 4 மணி காட்சி முதல் காட்சியாக வெளியிடப்பட்டது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viralimalai, India

எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த துணிவு படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  விராலிமலை ஜோதி திரையரங்கில் துணிவு திரைப்படம் அதிகாலை 4 மணி காட்சி முதல் காட்சியாக வெளியிடப்பட்டது. துணிவு படத்துக்கான இரண்டு நாள்களுக்கு உண்டாக காட்சிகளின் டிக்கெட்கள் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டது.

இன்று அதிகாலை திரையிடப்பட்ட துணிவு படத்தை பார்க்க கொட்டும் பனியையும்  பொருட்படுத்தாமல் நள்ளிரவு முதலே அஜித் ரசிகர்கள் திரையரங்கில் திரண்டனர். திரையரங்கம் முழுவதும் துணிவு பட கட் அவுட்கள் வைத்து ரசிகர்கள் அமர்களப்படுத்தி இருந்தனர்.

திரையரங்கமே திருவிழாக்கோலம் பூண்டது. துணிவு பட ரீலீஸை கொண்டாடும் விதமாக அஜித் கட் அவுட்களுக்கு மாலை அணிவித்தும் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி தீர்த்தனர். தாரை  தப்படைகள் சத்தம் விண்ணை பிளக்க ரசிகர்கள் நடனமாடி துணிவை கொண்டாடினர்.

First published:

Tags: Ajith, Ajithkumar, Local News, Pudukkottai, Tamil News, Thunivu