முகப்பு /புதுக்கோட்டை /

அறந்தாங்கி அருகே வேளாண்மை விற்பனை, அரவை கொப்பரை கொள்முதல் நிலையம் தொடக்கம்! 

அறந்தாங்கி அருகே வேளாண்மை விற்பனை, அரவை கொப்பரை கொள்முதல் நிலையம் தொடக்கம்! 

X
அரவை

அரவை கொப்பரை கொள்முதல் நிலையம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ராஜேந்திரபுரத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின், அரவை கொப்பரை கொள்முதல்நிலைய தொடக்கவிழா நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விற்பனை கொள்முதல் துவக்க விழா நடைபெற்றது. 

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விற்பனை கொள்முதல் துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் விவசாயிகளுக்கு மானிய விலையில் மருந்து தெளிக்கும் தெளிப்பானும் ,மழை காலங்களில் நெல் விதைகள் மற்றும் தேங்காய் கொப்பரைகளை பாதுகாக்க தார்பாய்களும் மானிய விலையில் வழங்கப்பட்டது.

அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதியில் இருந்து தேங்காய் கொப்பரைகளை இந்த சேமிப்பு கிடங்கில் கிலோ கணக்கில் கொடுத்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. செல்வி மற்றும் புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் அரசு அதிகாரிகள் அறந்தாங்கி கோட்டாட்சியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அரவை கொப்பரை கொள்முதல் நிலையம் தொடக்கம்

மேலும் இந்த சேமிப்புக் கிடங்கின் அருகில் மரக்கன்றுகளை சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் நட்டு வைத்தார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Pudukkottai