முகப்பு /புதுக்கோட்டை /

திருவப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் மாசி மக திருவிழா.. பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.. 

திருவப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் மாசி மக திருவிழா.. பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.. 

X
திருவப்பூர்

திருவப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் மாசி மக திருவிழா

Pudukkottai News | மாசி மகத்தை முன்னிட்டு புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில்  திருவிழா ஏற்பாடுகள் விமர்சையாக நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

மாசி மகத்தை முன்னிட்டு புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவிழா ஏற்பாடுகள் விமர்சையாக நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக பால்குடம், காவடி எடுத்து வந்த நூற்றுக்கணக்கான பக்தர்களால் கோவில் வளாகம் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்பட்டது.

புதுக்கோட்டை நகர்புறத்தை சுற்றியுள்ள அனைத்து குக்கிராமங்களில் இருந்து திருவப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்துக்கொண்டு படையெடுத்தனர். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் தொடக்க நிகழ்வாக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த ஒரே நேரத்தில் குவிந்ததால் கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு கோவில் அருகில் அன்னதானம் ஆங்காங்கே வழங்கப்பட்டது. விரதத்தை நிவர்த்தி செய்யும் வகையில் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தி பக்தியுடன் அம்மனை வழிபட்டு சென்றனர்.

இதையும் படிங்க  : பசுமை... அழகிய சுனைகள்... தேன்கூடு... தேனிமலை முருகன் கோவிலுக்கு போயிருக்கீங்களா... மிஸ் பண்ணக்கூடாத அற்புத இடம்!

இதனைத்தொடர்ந்து ஆலய தேரோட்ட நிகழ்வுகள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. பால்குடம் எடுக்கும் நிகழ்வை முன்னிட்டு புதுக்கோட்டை நகர்புறத்தில் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு நீர்மோர், பானகம், மதிய உணவு ஆகியவை வழங்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகராட்சி அலுவலர்கள் சார்பாகவும் நகராட்சி அலுவலக வாசலில் நீர்மோர், பானகம், பதநீர் ஆகியவை வழங்கப்பட்டன.

First published:

Tags: Local News, Pudukkottai