Home /pudukkottai /

முந்திரி மனம் கமழும் ஆதனக்கோட்டை..

முந்திரி மனம் கமழும் ஆதனக்கோட்டை..

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை: முந்திரி மனம் கமழும் ஆதனக்கோட்டை

Pudukkottai District News | புதுக்கோட்டை தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை நகரில் இருந்து 25 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது ஆதனக்கோட்டை கிராமம். இங்கு திரும்பும் திசையெல்லாம் முந்திரி மனம் தான்..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai
புதுக்கோட்டை - தஞ்சை நெடுஞ்சாலையில் திரும்பும் திசையெல்லாம் முந்திரி... புதுக்கோட்டை மாவட்டம் பொதுவாகவே வறண்ட பகுதியாக விளங்கி வருகிறது. இருந்த போதிலும் வறட்சியையும் பொருட்படுத்தாது பல்வேறு புதிய முயற்சியில் விவசாயிகள் இறங்கி சாதித்து வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முந்திரி விவசாயத்தில் முத்திரை பதித்து வருகின்றனர் ஆதனக்கோட்டை கிராமத்தினர்.

புதுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் புதுக்கோட்டையில் இருந்து 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஆதனக்கோட்டை கிராமம். ஆதனக்கோட்டையின் வழியாக செல்லும் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் நமக்கு காட்சி தருவது அனைத்தும் முந்திரி பருப்பு கடைகளும், முந்திரிப் பருப்பை பிரித்தெடுக்கும் ஆதனக்கோட்டை மக்களும் தான்.

மரங்களில் இருந்து பறித்தோ அல்லது மொத்த வியாபாரியிடம் இருந்து மூட்டைகளாகவோ பச்சை முந்திரிக் கொட்டைகளை வாங்கும் விவசாயிகள், அவற்றை சட்டியில் போட்டு வருத்து எடுத்து அதற்கே உரிய முறையில் அவற்றை உடைத்து எடுத்து பருப்புகளை பாக்கெட்டுகளில் போட்டு விற்பனை செய்கின்றனர். ஒரு கிலோ பாக்கெட்டுகள், அரை கிலோ பாக்கெட்டுகள், கால் கிலோ பாக்கெட்டுகள் மற்றும் 50 கிராம் பாக்கெட்டுகள் வரை கிடைக்கின்றன.

இதையும் படிங்க:  திங்கள்தோறும் களைகட்டும் ஆலங்குடி, அறந்தாங்கி சுற்றுவட்டார கிராமங்களின் ஏலக்கடைகள்..

சில்லறையாக விற்பனை செய்வது பயணிகளை கவர மட்டும்தானே தவிர்த்து முழு நேரமாக தஞ்சை, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மொத்த வியாபாரிகளிடம் முந்திரிப் பருப்புகளை விற்று விடுகின்றனராம் அப்பகுதி வியாபாரிகள். பச்சை முந்திரிக் கொட்டை 81 கிலோ மூட்டைகளாக வாங்கும் விவசாயிகளுக்கு தை மாதம் முதல் சித்திரை மாதம் வரையிலான மாதம் தான் முந்திரிப் பழ சீசன் என்பதால், அந்த நேரங்களில் பச்சை முந்திரி 81 கிலோ மூட்டை 7000 முதல் 7500 ரூபாய் வரை கிடைப்பதாகவும்,
சீசன் இல்லாத சாதாரண நாட்களில் 81 கிலோ மூட்டை 10000 ரூபாயைத் தாண்டுகிறதாம்.


புதுக்கோட்டை: முந்திரி மனம் கமழும் ஆதனக்கோட்டை


81 கிலோ மூட்டை பச்சை முந்திரிக் கொட்டையை வறுத்து பருப்பாக மாற்றினால் 17-19 கிலோ முந்திரிப் பருப்பு தான் கிடைக்கிறதாம். ஆனாலும், இந்த தொழில் ஓரளவு லாபகரமானதாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள்.

இதையும் படிங்க:  மண்வெட்டிகள் வாங்க கீரமங்கலத்தை நாடி வரும் அண்டை மாவட்ட விவசாயிகள்..

இந்த தொழிலை செய்வதற்கும், விற்பதற்கும் அரசிடம் உரிமம் பெற வேண்டி இருப்பதால், ஆதனக்கோட்டையில் மட்டும் 110க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உரிமத்துடன் இருக்கின்றனர்.
பலரும் சாலைகளில் கடைகள் வைத்து வியாபாரம் செய்தாலும், சிலர் வீட்டிலேயே பருப்பை பிரித்தெடுத்து தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் நேரடியாக விற்று விடுகின்றனர். மொத்த வியாபாரிகளிடம் கிலோ முந்திரிப் பருப்பை 740 ரூபாய்க்கு கொடுக்கும் வியாபாரிகள், உழைப்பு மற்றும் லாபம் கருதி சில்லரையாக கடைகளில் விற்கும் போது மட்டும் கிலோ முந்திரி பருப்பு 800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.


புதுக்கோட்டை: முந்திரி மனம் கமழும் ஆதனக்கோட்டை


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மத்திய அரசிலிருந்தும், மாநில அரசிலிருத்தும் உரிய உதவிகள் அவ்வப்போது கிடைக்கப் பெற்று, தொழிலை எளிமையாக்க பருப்பு பிரித்தெடுக்கும் இயந்திரம் உள்ளிட்டவற்றை மானியத் தொகையில் வழங்கவும் வியாபாரிகக் கோரிக்கை வைக்கின்றனர்.
இனிவரும் காலங்களில், ஆதனக்கோட்டை வழியாக பயணிக்க வாய்ப்பு இருப்பவர்கள் ருசியான முறுகலான முந்திரியை சுவைத்தவாரே பயணிக்கலாம்
Published by:Arun
First published:

Tags: Local News, Pudukkottai

அடுத்த செய்தி