புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடியங்காட்டுப்பட்டி கிராமத்தைச்சேர்ந்த இளைஞர் லோகேஷ் பொறியியல்படித்துள்ளார். பொறியியல் படித்தாலும் பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் இயற்கை முறையில் லோகேஷ்க்கு பெருங்காதல் உண்டு. மாப்பிள்ளை சம்பா மற்றும் பூங்கார் ஆகிய நெல் ரகங்களை பயிரிட நிலத்தை தயார் செய்து கொண்டிருக்கும் லோகேஷிடம்கேள்விகளை முன்வைத்தோம்.
பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து பேசிய லோகேஷ், ’தற்போது அனைவரும் பாரம்பரிய நெல் ரகங்களை மறந்து வருகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் அந்த நெல் ரகங்களை எல்லாம் சாப்பிட்டுஉடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ்ந்தனர். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பாரம்பரிய நெல் ரகங்களை அனைத்து விவசாயிகளும் சாகுபடி செய்ய வேண்டும் என்றும் அதனை சரியான முறையில் செய்தால் லாபம் ஈட்ட முடியும்” என்று தெரிவித்தார்.
மாப்பிள்ளை சம்பா அரிசியை தினசரி உணவில் சேர்த்துகொண்டால் உடல் வலிமை அதிகரிக்கும், நரம்புகளும் வலுப்படும். குறிப்பாக வளரும் ஆண் பிள்ளைகளுக்கு ஏற்றது மாப்பிள்ளை சம்பா. இது சிவப்பு நிறத்தில் இருக்கும். இதில் புரதம், நார்ச்சத்து, உப்பு சத்து, இரும்புச்சத்து, துத்தநாக சத்துகள் மிகுந்திருக்கின்றன. இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்துகள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்க கூடியது.
அடுத்து பூங்கார் என்பது பெண்களுக்கான அரிசி. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் பூங்கார் அரிசியில் உள்ளன. கர்ப்ப காலத்தில் குழந்தை வளர்ச்சிக்கு இந்த அரிசி ரகம் உதவுகிறது.
சுகப்பிரசவம் ஆக விரும்பும் கர்ப்பிணிகள், ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்த பூங்கார் அரிசியை தினமும் உணவில் சேர்த்து வந்தால், அவர்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படும்.
பாலூட்டும் பெண்கள், கரு உருவாக வேண்டும் என நினைக்கும் பெண்கள் ஆகியோருக்குஅவசியமான ஒன்றாக இந்த பூங்கார் விளங்குகிறது” என்றும் இளைஞர் லோகேஷ் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai