Home /pudukkottai /

Pudukkottai | கொரோனாவால் வேலை பாதிப்பு: தன்னம்பிக்கையுடன் சுயதொழில் தொடங்கி அசத்தும் இளைஞர்

Pudukkottai | கொரோனாவால் வேலை பாதிப்பு: தன்னம்பிக்கையுடன் சுயதொழில் தொடங்கி அசத்தும் இளைஞர்

பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் இளைஞர்

பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் இளைஞர்

புதுக்கோட்டையில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் பாக்கு மட்டையில் தட்டு உருவாக்கும் தொழிலில் இறங்கி அசத்திவருகிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India
  புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். ஐடிஐ என அழைக்கக் கூடிய தொழிற்கல்வி படிப்பை முடித்து விட்டு ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரபு நாடுகளில் வேலை பார்த்துள்ளார்.
  கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த நாடு திரும்பியவர் திரும்பி வெளிநாடு செல்ல தடையாக கொரோனா குறுக்கிட்டது.

  வேறு வழியின்றி வீட்டில் இருந்து விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்த சிவக்குமார், தனது வருமானத்திற்கு ஒரு தொழில் செய்யலாமே என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
  இளைஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திராமல், சுய தொழில்களை செய்ய ஏதுவாக மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களையும், கடன் உதவிகளையும் அளிப்பது குறித்து கேள்விப்பட்ட சிவக்குமார், சிறிய அளவிலான தொழில் ஒன்றை தொடங்கலாம் என முடிவெடுத்து அரசிடம் உதவி கேட்டுச் சென்றிருக்கிறார்.

  பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் இயந்திரம்


  அப்போது தான் அவருக்கு, சிறிய கோவில்களில் தொடங்கி பெரிய பெரிய உணவகங்கள் வரை அனைத்து இடங்களிலும் பிரசாதங்கள், உணவுகள் வழங்க பாக்கு மட்டையிலான தட்டுகள் மற்றும் தொன்னைகளை வழங்குவதைக் கண்டுள்ளார். உடனடியாக அது தொடர்பாக இயந்திரங்கள் கிடைக்கும் இடங்கள் மற்றும் பாக்குமட்டையில் தட்டு தயாரிக்க தேவையான உபகரணங்கள் குறித்து தெரிந்துகொள்ள கர்நாடக மாநிலத்தில் உள்ள சில தொழிற்சாலைகளை நேரில் விசிட் அடித்துள்ளார்.

  தயாரிக்கப்பட்ட தட்டை துடைக்கும் பெண்


  போதுமான அனுபவங்களும், பயிற்சியும் அங்கு கிடைக்கவே உடனடியாக அரசின் மானியத்துடன் கூடிய கடனுதவியைப் பெற்று 5 வகையான அளவில் பாக்குமட்டைத் தட்டுகள் மற்றும் தொன்னைகள் தயாரிக்கும் இயந்திரங்களை வாங்கியுள்ளார்.
  அரசு வழங்கிய கடன் உதவியோடு குடும்பத்தினரின் நிதி உதவி மற்றும் தனது சேமிப்புகள் என சிறு கட்டிடம் உட்பட அனைத்துப் பணிகளுக்குமாக 4,50,000 ரூபாயை முதலீடாக வைத்து தொழிலை தொடங்கி உள்ளார்.

  பாக்கு மட்டை தட்டுகள்


  தொழிலை ஆரம்பித்த போது தனக்கு தட்டுகளை விற்கவும் மார்க்கெட்டிங்க் செய்வதும் தான் மிகக் கடினமாக இருக்கப் போவதாக நினைத்ததாகவும், ஆனால் தான் நினைத்ததை விட இத்தயாரிப்புகளுக்கான தேவை மார்க்கெடெடில் அதிகமாக இருப்பதாவும் தெரிவிக்கிறார் சிவக்குமார்.

  மேற்கொண்டு நம்மிடம் பேசிய சிவக்குமார், ’தற்போது கிடைக்கும் வருமானம் ஏறத்தாழ மாதமொன்றிற்கு 20,000 ரூபாய் வரைதான் இருப்பதாகவும், அதற்குக்காரணம் தன்னிடம் தற்போது இருக்கும் இயந்திரங்களால் உற்பத்தி திறனை அதிகமாகத் தர முடியாதது தான் என்கிறார்.

  இதுகுறித்து, சில நிறுவனங்களுடன் பேசி வருவதாகவும் விரைவில் தற்போதைய இயந்திரத்தில் இருக்கும் அழுத்தும் பகுதியை மாற்றி அமைத்து உற்பத்தி திறனை அதிகரித்தால் மாதம் 50,000 ரூபாய் வரையிலும் லாபமாக பெற்று விட முடியும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

  அனைத்தையும் விட அதிகளவில் லாபத்தை குறைக்கும் காரணியாக இருப்பது பாக்கு மட்டைகள் தான் என்கிறார் சிவக்குமார். கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து தான் பாக்கு மட்டைகளை வாங்க வேண்டி இருக்கிறது. கர்நாடகத்தில் ஒரு பாக்கு மட்டையின் விலை 2.60 காசுகளாக இருப்பதாகவும் அவற்றை வாங்கி வரியோடு சேர்த்து ஊருக்கு கொண்டு வந்து சேர்க்கும் போக்குவரத்து செலவோடு ஏறத்தாழ ஒரு பாக்கு மட்டையின் விலை ரூ. 6 ஆக உயர்வதாகவும் தெரிவிக்கிறார். தன்னைப் போன்ற சிறு, குறு தொழில் செய்வோரைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு இது போன்ற மூலப் பொருட்களை மானிய விலையில் வழங்கினால் அது தன்னைப் போன்றோருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்கிறார் சிவக்குமார்.

  சிவக்குமாரின் இந்த பாக்கு மட்டை தயாரிப்பு இடம், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் கொத்தமங்கலம் சாலையில் சேந்தன்குடியில் அமைந்திருக்கிறது.
  சிவக்குமாரிடம் வெவ்வேறு அளவிளான பாக்கு மட்டை தட்டுகள் மற்றும் தொன்னைகள் ரூ.1.50 முதல் ரூ. 6 வரை கிடைக்கின்றன.
  தொடர்புக்கு: ஜோதி என்டர்பிரைசஸ், சேந்தன்குடி.
  சிவகுமார்.-8838198184.

  செய்தியாளர்: துர்கா மகேஸ்வரன், புதுக்கோட்டை.
  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Pudukkottai

  அடுத்த செய்தி