முகப்பு /புதுக்கோட்டை /

ரூ.1,000 உரிமைத்தொகை குடும்ப தலைவிகளுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம்..புதுக்கோட்டை பெண்கள் கருத்து...

ரூ.1,000 உரிமைத்தொகை குடும்ப தலைவிகளுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம்..புதுக்கோட்டை பெண்கள் கருத்து...

X
மாதிரி

மாதிரி படம்

Pudukkottai News| மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசுக்கு பெண்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

  • Last Updated :
  • Pudukkottai, India

தமிழ்நாடு அரசு வழங்கும் மாதம் ரூபாய் 1,000 உரிமைத்தொகை குடும்ப தலைவிகள் செய்யும் வீட்டு வேலைக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் என புதுக்கோட்டை பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில், மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் மகளிர் இந்தத் திட்டத்தால் பயன்பெற முடியாது. மற்றவர்களுக்கான வரையறைகள் விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த நிதியாண்டில் 6 மாதங்களே உள்ளதால், திட்டத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை குறித்து பேசிய புதுக்கோட்டை மாவட்ட பெண்கள், இது மிகவும் சிறப்பு வாய்ந்த திட்டம் ஏனென்றால் வீட்டிலேயே இருக்கும் பெண்களுக்கு பொதுவாக வேலைக்கு செல்லாதது, குடும்பத்திற்கு அவர்களின் பங்களிப்பு இல்லை என நினைத்து பாரபட்சத்துடன் நடத்தப்படுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த திட்டம் மூலம் பெண்களின் நிலை மாறி குடும்பத்தில் பெண்கள் செய்யும் வீட்டு வேலைக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதை கொடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.

top videos

    மேலும் இந்த திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தகுதியுடைய பெண்களுக்கு மட்டும் தான் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால், தங்களுக்கு இந்த நிதி கிடைக்காதோ என்ற ஐயம் பல பெண்களுக்கு ஏற்பட்டிருக்கிறது?

    First published:

    Tags: Local News, Pudukottai