Home /pudukkottai /

தென்னை, பூங்கன்றுகளுக்கு ஊடுபயிராக கிராம்பு - புதுக்கோட்டை விவசாயியின் புது முயற்சி

தென்னை, பூங்கன்றுகளுக்கு ஊடுபயிராக கிராம்பு - புதுக்கோட்டை விவசாயியின் புது முயற்சி

விவசாயி

விவசாயி

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி கிராம்பு பயிரிடுவதன் மூலம் புதிய முயற்சியைத் தொடக்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Keeramangalam, India
    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தங்க கண்ணன். இவர் தனது தோட்டத்தில் மண் சாராத பயிர்களை பயிரிட்டு புதுப் புது முயற்சியாக பல பயிர்களை பயிர் செய்து வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக தனது தோட்டத்தில் தென்னை மற்றும் சம்பங்கி பூக்களின் இடையே ஊடுபயிராக வெப்பமண்டல பகுதியை சாராத பயிரான கிராம்பை பயிரிட்டு புது முயற்சியில் இறங்கியுள்ளார் விவசாயி தங்க கண்ணன்.

    தென்னை வைக்கப்பட்ட நிலம்


    தனது தோட்டத்தில் இருக்கும் பல இடங்களில் தென்னையில் ஊடுபயிராக பல்வேறு பயிர்களையும் பயிரிட்டுள்ள விவசாயி தங்க கண்ணன் தனது புது முயற்சியாக தற்போது கிராம்பு பயிரை பயிரிட்டுள்ளார்.

     

    மலைப்பிரதேசங்கள் மட்டும் விளையும் பயிரான கிராம்பை, தனது தோட்டத்தில் வைத்து வளர்த்தும் வருகிறார். இன்னும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் கிராம்பு செடி, மரம் ஆகிவிடும் என்றும், ஐந்து ஆண்டுகளில் கிராம்பு மரங்களில் காய்ப்புக் கிடைக்கும் என்றும் உறுதியுடன் கூறுகிறார் விவசாயி தங்க கண்ணன்.

    விவசாயி கண்ணன்


    கிராம்பு மட்டுமின்றி தென்னைக்கு ஊடுபயிராக அத்தி மரங்களையும் மற்றும் பல்வேறு மண் சாராத பயிர்களையும் பயிரிட்டு வளர்க்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் விவசாயி தங்க கண்ணன்.

    விளைநிலம்


    இவரது முயற்சிக்கு இதுவரையில் யாரிடமும் உதவியும் கேட்கவில்லை. எந்த ஒரு அறிவுரையும் அதிகாரிகளிடமும் கேட்கவில்லை. தானாகவே முயற்சி செய்வதாகவும் ஆனால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும் என்றும் இந்த கிராமத்தில் நல்ல பயிராக வளர்ந்து அதன் மூலம் நல்ல வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பலரும் கிராம்பு விதைப்பு மற்றும் அதை பயிரிட்டு வளர்ப்பதற்கான முறைகளை சொல்லித் தந்து இது போன்ற பணப் பயிர்களை வறட்சி பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்திலும் பயிராக வளர்க்க தான் நடவடிக்கை எடுக்கும் திட்டத்தில் இருப்பதாக விவசாயிகள் கண்ணன் தெரிவிக்கிறார்.

    இதுபோன்ற விவசாயிகளின் புதுமையான முயற்சியின் காரணமாக வறண்ட பகுதியான புதுக்கோட்டை விரைவில் பசுமையாக மாறிவிடும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அப்பகுதி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Pudukkottai

    அடுத்த செய்தி