Home /pudukkottai /

தகனம், பிரசவம், விபத்துக்கு இலவசம்- 50 ஆண்டுகளாக பொதுசேவையே வாழ்க்கையாக கொண்ட மாமனிதர்

தகனம், பிரசவம், விபத்துக்கு இலவசம்- 50 ஆண்டுகளாக பொதுசேவையே வாழ்க்கையாக கொண்ட மாமனிதர்

சமூக சேவையாளர் கணேசன்

சமூக சேவையாளர் கணேசன்

புதுக்கோட்டையைச் சேர்ந்த நபர் அவருடைய 50 ஆண்டுகளை பொதுசேவைக்காக அர்பணித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் கணேசன். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரவற்ற இறந்தவர்களின் உடல்களை முழு மரியாதையோடு நல்லடக்கம் செய்வது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை வாகனத்தில் இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, பிரசவத்திற்கு இலவசமாக பெண்களை அழைத்துச் செல்வது உள்ளிட்ட சேவைகளை கடந்த 1968-ம் ஆண்டு முதல் செய்து வருகிறார்.

    ஆலங்குடி நகரில் சிறிய அளவிலான பழைய இரும்புக்கடை வைத்திருக்கும் கணேசன் அதிலிருந்து தினசரி கிடைக்கும் 200, 300 ரூபாய்க்கும் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பி விடுவதாக புன்முறுவலோடு பதிலளிக்கிறார்.

    சமூகசேவையாளர் கணேசன்


    53 ஆண்டு கால சேவையில் இதுவரை 7,743 ஆதரவற்ற உடல்களை பல்வேறு மாவட்டங்களில் அடக்கம் செய்துள்ள கணேசன், தமிழகம் முழுவதும் பயணித்தும் இதுவரை ஒரு விபத்து கூட ஏற்படுத்தியதில்லை என்பது கூடுதல் சிறப்பு.

    அவருடைய இரும்பு கடையில் கணேசன்


    சமூக சேவைக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்து விட்ட கணேசனுக்கு 2018ல் வந்த கஜா புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. தான் வசித்து வந்த வீட்டையும் கஜா சூரையாடி சென்று விட நடிகர் லாரன்ஸ் சிறிய அளவிலான வீடு ஒன்றை கட்டித் தந்துள்ளார்.

    கணேசன்


    வீட்டின் உள்ளே வைக்க இடமில்லாத அளவிற்கு விருதுகளை வாங்கி குவித்துள்ள கணேசனைப் பாராட்டி கௌரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும்.

    சமூக சேவைக்கு பயன்படுத்தும் கார்


    அரை நூற்றாண்டிற்கும் மேலாக தனது வாழ்வையே பொது சேவைக்கு அர்ப்பணித்துள்ள கணேசனுக்கு அரசின் சார்பில் அங்கீகாரம் ஏதும் வழங்கவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாகவும் உள்ளது.

    கணேசனின் சேவையைப் பாராட்டி அவருக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Pudukkottai

    அடுத்த செய்தி