புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டு வரும் பிரமாண்ட பூங்கா மிக விரைவில் மக்கள் பயன்ப்பாட்டிற்கு வரும் என அப்பகுதி மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
புதுக்கோட்டை நகராட்சியின் சார்பில் சத்தியமூர்த்தி சாலையில் புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி எதிரில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.25 கோடி மதிப்பீட்டில் 5 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. பார்ப்பவரின் கண்களை கவரும் வண்ணம் அமைந்துள்ளது இந்த பூங்கா. புதுக்கோட்டைக்கு மேலும் ஒரு சிறப்பாக இது அமையும் என்பது நிச்சயம் நம்பப்படுகிறது
இப்பூங்காவில் நடைப்பயிற்சி பாதை, சைக்கிள் ட்ராக், ஆண், பெண், முதியவர்களுக்கான உடற்பயிற்சி கூடங்கள், இசை நீரூற்று, போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவை மாற்றுத்திறனாளிகளும் எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு கணிதம் மற்றும் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க அறிவியல் சார்ந்த பொருட்களும் அதன் இயக்கங்களும் குறித்தும் விளக்கும் வகையில் இந்த பூங்கா இருக்கும், மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஹெல்த் பூங்கா உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளது.
பூங்காவின் சிறப்பம்சம் என்ன?
பலவகையான விளையாட்டு கூடம், ஸ்கேட்டிங் பயிற்சி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ,சிமென்ட் ட்ரீ, திறந்த கலையரங்கம், யோகா பயிற்சி மேடை, பொதுமக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள புல் தரைகள் மற்றும் சிமெண்ட் கலவைகளால் ஆன விலங்குகளின் உருவம்,புற்களால் உருவாக்கப்பட்ட பறவைகளின் உருவங்கள்,உயர்மின் கோபுர விளக்கு, கழிப்பறை வசதி, உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய மாபெரும் பூங்காவாக அமைக்கப்பட்டு வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பொது மக்களை கவரும் வகையில் இயற்கை எழில் சூழ்ந்த அமைப்புகளுடன் குழந்தைகள் விளையாடும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது. பூங்கா திறப்பு குறித்து இப்போதே பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.
பூங்கா எப்போழுது திறப்பு?
வரும் மார்ச் மாதத்திற்குள் பூங்கா பணிகள் நிறைவு செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பை விட பல மடங்கு பிரம்மாண்டமாக இந்த பூங்கா அமைய போகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukottai