ஹோம் /புதுக்கோட்டை /

மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவி... 

மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவி... 

X
வெற்றி

வெற்றி பெற்ற மாணவி மற்றும் ஆசிரியர்கள் 

pudukkottai : புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சரளப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலைத் திருவிழாவில் கலந்து கொண்டனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் செரளபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் சு.ராஜஹரிணி என்ற மாணவி மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளில் கலை திருவிழா நடைபெற்றது. இந்த கலை திருவிழாவானது  வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநிலம் என்று மூன்று பகுதிகளாக நடைபெற்றது. இதில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் தமிழக அரசின் சார்பில் சான்றிதழ்கள் மற்றும் கலையரசன் கலையரசி என்ற விருதுகளும் வழங்கப்பட உள்ளது.

இதனை அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சரளப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலைத் திருவிழாவில் கலந்து கொண்டனர். அதில் ஏழாம் வகுப்பு படித்து வரும் ராஜ ஹரிணி என்ற மாணவி வட்டார அளவில் நடைபெற்ற கலை திருவிழா போட்டியில் திருக்குறள் ஒப்புவித்தல் கட்டுரை போட்டி, பேச்சு போட்டி ஆகிய மூன்றிலும் வெற்றி பெற்று மாவட்ட அளவிற்கு போட்டிக்கு தேர்வானார்.

அதன் பின் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றார். அதன் பின் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் மதுரையில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார் மாணவி சு.ராஜஹரிணி.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது குறித்து பேசிய மாணவி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும்  இதற்காக எனக்கு உதவி செய்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் மற்றும் தனது சகோதரி ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்தார். மேலும் திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் பற்றி கவிநயத்துடன் பேசுவதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இறுதியில் நண்பர்களே அறம், பொருள், இன்பம் மூன்றும் பேசும் முப்பால் நூல் தான் தாய்ப்பாலுக்கு பின் தமிழர்கள் பருகும் தகப் பண்பால் ஆதலால் திருக்குறள் என்னும் முப்பால் நூலினை தினமும் புரட்டுகதப்பால் பெருகிடும் துயரினை எல்லாம் அப்பால் துரத்துக என்று கூறி அனைவரும் திருக்குறளை படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் மாணவி.

First published:

Tags: Pudukottai