முகப்பு /புதுக்கோட்டை /

ஆலங்குடி ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்.. மல்லுக்கட்டிய காளையர்கள்..

ஆலங்குடி ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்.. மல்லுக்கட்டிய காளையர்கள்..

X
ஆலங்குடி

ஆலங்குடி ஜல்லிக்கட்டு

Pudhukottai Jallikattu | புதுக்கோட்டை ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இந்த போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக வீரர்கள், அதிகாரிகள், பார்வையாளர்கள் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மட்டுமல்லாமல் தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 700 காளைகள் களம் இறக்கப்பட்டது அதனை 300 காளையர்கள் பங்கேற்றனர். வாடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டி அடக்க முற்பட்டனர்.

இந்த ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிய காளையர்களுக்கும் சிறந்த முறையில் களமாடும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் இருசக்கர வாகனம் (பைக்) தங்க நாணயம், வெள்ளி நாணயம், மின்விசிறிகள், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்த ஜல்லிக்கட்டில் ஆலங்குடி துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி தலைமையில் 300 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சுகாதார துறையினர் வருவாய் துறையினர், கால்நடைபராமரிப்புத் துறையினர்‌ உள்ளிட்ட பல்வேறு துறையினரின் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

First published:

Tags: Jallikattu, Local News, Pudukkottai