ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு இதுதான் காரணமா?

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு இதுதான் காரணமா?

புதுக்கோட்டை எஸ்.பி. வந்திதா பாண்டே

புதுக்கோட்டை எஸ்.பி. வந்திதா பாண்டே

Pudukkottai District | புதுக்கோட்டையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கீரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாரை பணியிடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி கோகிலா(36). வீட்டு பாதை பிரச்சனை புகாரில் கோகிலாவை கீரமங்கலம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி(சனிக்கிழமை) கோகிலா அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தன்னை கைது செய்து தாலியை கழற்ற வைத்து விட்டனர் என்றும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து மீள முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருந்தார்.

மேலும் கோகிலாவின் சாவிற்கு காரணமான மேற்பனைக்காடு வடக்கு திமுக பிரமுகர் எம்.எம்.குமார், அவரது மனைவியும் காவலருமான புவனேஸ்வரி, கீரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், பெண் போலீஸ் கிரேசி உள்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவரது உறவினர்கள், அரசியல் கட்சியினர், மேற்பனைக்காடு மற்றும் கீரமங்கலம் காவல் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: வியக்க வைக்கும் திருமயம் கோட்டை - தேடி செல்லும் வெளிநாட்டவர்கள்.. சுவாரஸ்ய பின்னணி..

இந்நிலையில், கோகிலாவின் கணவர் நீலகண்டன் கொடுத்த புகாரில், தனது மனைவி தற்கொலைக்கு காரணமான 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், புகாரில் குறிப்பிடப்பட்ட நபர்களை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என்று உறவினர்கள் கூறினர்.

புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன், கோகிலாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சம்பந்தப்பட்ட போலீசார், திமுக பிரமுகர் எம்.எம்.குமார் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பின்னர், கோகிலாவின் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் அதனை அடக்கம் செய்தனர்.

இதையும் படிங்க : புதுக்கோட்டை மாவட்டத்தில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் விவசாயிகள் - செலவுகளை குறைக்கிறது.!

இந்நிலையில், கீரமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாரை மீமிசல் காவல் நிலையத்திற்கும், பெண் போலீசார் கிரேசியை மணமேல்குடி காவல் நிலையத்திற்கும், புவனேஸ்வரியை நமணசமுத்திரம் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்து புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். உத்தரவிட்டார்.

யார் இந்த வந்திதா பாண்டே ஐ.பி.எஸ்.

காவல்துறையில் அதிரடிக்கு பெயர் பெற்ற பெண் அதிகாரி வந்திதா பாண்டே உத்தரப்பிரதேசம் அலகாபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழக கேடரில் 2010ம் ஆண்டு ஐ.பி.எஸ். பேட்ஜ். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணியாற்றி, மக்களிடம் நற்பெயரை பெற்றவர். நேர்மை தவறாமல் பணியாற்றுபவர் என்ற பெயர் பெற்றவர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது கரூர் எஸ்.பி.யாக இருந்த வந்திதா பாண்டே, கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட 570 கோட ரூபாயை மடக்கிப்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Pudukkottai