Home /pudukkottai /

இயற்கை ஆர்வலர் ‘மரம்’ தங்கசாமியின் நினைவை போற்றிய புதுக்கோட்டை மக்கள்.. யார் இவர்?

இயற்கை ஆர்வலர் ‘மரம்’ தங்கசாமியின் நினைவை போற்றிய புதுக்கோட்டை மக்கள்.. யார் இவர்?

இயற்கை

இயற்கை ஆர்வலர் ‘மரம்’ தங்கசாமி

Pudukkottai Maram Thangasamy | புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஐயா மரம் தங்கச்சாமி, நம்மாழ்வாருடன் இணைந்து பல வனங்களையும்,குறுங்காடுகளையும் இயற்கை விவசாயத்தையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்தவர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மறைந்த இயற்கை ஆர்வலர் ’மரம்’ தங்கச்சாமியின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 2,000 மரக்கன்றுகளை வழங்கியதோடு லட்சக்கணக்கான பனை விதைகளை நடவு செய்யும் பணியும் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்திற்கு உட்பட்ட சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மரம் தங்கச்சாமி. இவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து பல குறுங்காடுகளையும், பல்வகை மரங்கள் அடங்கிய வனங்களையும் பல பகுதிகளில் உருவாக்கியுள்ளனர்.

குறிப்பாக மரம் தங்க சாமி மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் லட்சகணக்கான மரங்களை உருவாக்கி வளர்த்துள்ளார். இந்த நிலையில் அவரது நினைவு தினமான நேற்று (செப் 16) அவரது நினைவை போற்றும் வகையில் கீரமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் கீரமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணிகள், பொதுமக்கள் மற்றும் அவ்வழியாக வந்த பேருந்துகளில் இருந்த பயணிகளுக்கு 500 மரக்கன்றுகளை வழங்கினர்.

இதையும் படிங்க:  பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கொடும்பாளூர் இதுதானா... 

இதனையடுத்து புதுக்கோட்டை- தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களான புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் தஞ்சை மாவட்டம் ஆவணம் ஆகிய பகுதிகளில் கைஃபா என்ற தொண்டு அமைப்பினர் 1500 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கும் வழங்கினர். அத்தோடு மட்டுமில்லாமல் கைஃபா அமைப்பினர் நெடுவாசல், ஆவணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளின் கரைகளில், கரைகளை பலப்படுத்தும் விதமாகவும் மர ஆர்வலர் மரம் தங்கச்சாமியின் நினைவை போற்றும் விதமாகவும் ஒரு லட்சம் பனை விதைகளை விதைக்கும் பணியை பள்ளி மாணவ மாணவிகளோடு சேர்ந்து தொடங்கினர்.

இதையும் படிங்க:  புதுக்கோட்டையில் ஒரு குட்டி ஊட்டி..

நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் மற்றும் தொண்டு அமைப்பினர் சேர்ந்து பெரியநாயகிபுரத்தில் உள்ள நீர் நிலையின் கரைகளில் பனைகளை நடவு செய்து இப்பணியை தொடர்ந்து ஒரு லட்சம் பனை விதைகளை அடையும் வரை தொடரப்போவதாக தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மரம் தங்கசாமியை ஏன் இவ்வாறு எல்லோரும் வணங்கி அவரது நினைவை போற்றும் விதமாக தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடவு, மரக்கன்றுகள் வழங்குதல், பனை விதை நடவு போன்ற காரியங்களை செய்து வருகின்றனர் என்றால் அவர் செய்த இயற்கை பணி வேறு யாராலும் செய்ய முடியாத என்பதால் தான்.
Published by:Arun
First published:

Tags: Local News, Pudukkottai

அடுத்த செய்தி