ஹோம் /புதுக்கோட்டை /

ரேஷன் கடைகளில் 135 காலிப்பணியிடங்கள் - முந்துங்கள்... புதுக்கோட்டையில் வேலை வாய்ப்பு!

ரேஷன் கடைகளில் 135 காலிப்பணியிடங்கள் - முந்துங்கள்... புதுக்கோட்டையில் வேலை வாய்ப்பு!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Pudukkottai Ration Shop Vacancies : புதுக்கோட்டை மண்டலத்தில் உள்ள கூட்டுறவு சங்கம் சார்பில்  ரேஷன் கடையில் வேலை வாய்புக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

கூட்டுறவு சங்கம் சார்பில் புதுக்கோட்டை ரேஷன் கடைகளில் வேலை வாய்புக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிவிப்பில், கூறியிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் ரேஷன் கடைகளில் உத்தேசமாக காலியாக உள்ள 135 விற்பனையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது.

இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து http://www.drbpdk.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே 2022 நவம்பர் 14 ஆம் தேதி மாலை 5.45 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் இந்த பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, வயதுவரம்பு, இடஒதுக்கீடு, விண்ணப்பக்கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விவரங்கள் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் (www.drbpdk.net) வெளியிடப்பட்டுள்ளன.

அதன், விரிவான அறிவிக்கை மற்றும் விண்ணப்பதாரர்களு க்கான அறிவுரைகளை கவனத்தில் கொண்டு விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விற்பனையாளர் பணியிடத்திற்காக இணைய தளத்தில் எளிமையாக விண்ணப்பிப்பது தொடர்பாக.

Must Read : அடடே... வடிவேலு படத்தின் நகைச்சுவை காட்சிகள் இங்குதான் எடுக்கப்பட்டதா! - விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

https://youtube/G6c5e2ELJD8 என்ற வளையொளி (youtube Channcl - TNCOOP DEPT) தளத்தில் விரிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறைகுறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் pdccbank@yahoo.co.in என்ற இ-மெயில் மூலமும், உதவிமைய தொலைபேசி எண் 04322222389 வாயிலாகவும் புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விண்ணப்பதாரர்கள் மேற்காணும் வளையொளி (யூ-டியூப்) தளத்தினை பயன்படுத்தி, தாமதிக்காமல் நவம்பர் 14ஆம் தேதிக்குள்  விண்ணப்பித்து வேலை வாய்ப்பை பெற்றுங்கள்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Pudukottai, Ration card, Ration Shop