முகப்பு /புதுக்கோட்டை /

பிப்ரவரி மாதம் இந்த ராசியினருக்கெல்லாம் அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. புதுக்கோட்டை ஜோதிடர் கணிப்பு!

பிப்ரவரி மாதம் இந்த ராசியினருக்கெல்லாம் அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. புதுக்கோட்டை ஜோதிடர் கணிப்பு!

X
ராசிபலன்

ராசிபலன்

February 2023 Rasipalan | புதுக்கோட்டை ஜோதிடர் மாரிக்கண்ணனின் 12 ராசிக்கான பிப்ரவரி மாத பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu | Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 45 வருடங்களுக்கு மேலாக ஜோதிட கணிப்பில் ஈடுபட்டு வரும் ஜோதிடர் மாரிக்கண்ணனின்கணிப்பில் பிப்ரவரி மாதத்திற்கான 12 ராசிகளின் பலன்கள்

மேஷம்

அற்புதமான நல்ல பலன்களை சந்திக்க இருக்கிறீர்கள். உங்களுக்கு சுய விரயங்கள் நடக்கும். சிலருக்கு வெளிநாட்டு தொடர்புகள் ஏற்பட்டு நற்பலன்கள் தரும். தொழிலில் லாபம் கிடைக்கும். வீடு மனையோகம் உண்டாகும். கடன்கள் குறையும். மேலும் நன்மைகள் நடக்க முருகனை வழிபடுங்கள்.

ரிஷபம்

தைரியமும் நிதானமும் தேவை. கோபத்தை குறைத்து செயல்பட்டால் முன்னேற்றம் உண்டு. வீடு மனை பிரச்சனைகளில் இப்போது ஈடுபட வேண்டாம். சகோதர வகையில் பிரச்சனைகள் தீரும். மேலும் நன்மைகள் நடக்க பெருமாளை வணங்குங்கள்.

மிதுனம்

நற்பலன்கள் மிகுந்திடும் பொருளாதாரம் சீராக இருக்கும் கடன் பிரச்சனைகள் கட்டுக்கடங்கும் குடும்பத்தில் சற்று மன கசப்பு ஏற்படும் கனிவான சொற்களை பயன்படுத்துங்கள். எல்லா பிரச்சனைகளில் இருந்தும் வேறுபட மீனாட்சி அம்மனை வழிபடுங்கள்.

கடகம்

இக்காலகட்டத்தில் தைரியமும் முயற்சியும் தேவை. நிதானத்துடனும் அமைதியுடனும் செயல்பட்டால் நன்மை நடக்கும். உடல் நலத்தில் வண்டி வாகனங்களிலும் எச்சரிக்கை தேவை.கடன் வாங்கி சுபகாரியங்களை செய்வீர்கள் பதவி உயர்வும் வேலைவாய்ப்பும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. மேலும் நன்மைகள் நடக்க பராசக்தியை வழிபடுங்கள்.

சிம்மம்

வாழ்வில் மேன்மை ஏற்படும் பொருளாதாரம் உயரும். பழைய கடன்களில் பெரும் பகுதியை அடைத்து விடுவீர்கள். உயர் படிப்புகளில் வெற்றிகள் உண்டாகும். தாயின் உடல்நிலை சீராகும். மேலும் நன்மைகள் நடக்க சிவனை வழிபடுங்கள்.

கன்னி

தொல்லைகளிலிருந்து விடுபட்டு பொருளாதாரம் உயரும். வேலை கிடைக்கும் வேலையின் காரணமாக சிறிது காலம் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும். உடல் நலம் சீரடையும். குடும்பத்தில் சின்ன சின்ன கசப்புகள் தோன்றி மறையும். குடும்பத்தில் மற்றவர்களால் குழப்பம் ஏற்படும். இந்த குழப்பத்தை தடுக்க மீனாட்சி அம்மனை வழிபடுங்கள்.

துலாம்

பண வரவு அதிகரிக்கும். அதே சமயத்தில் செலவீனங்களும் ஏற்படும் கடன் விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். கடன் வாங்கி சில கடன்களை பைசல் செய்வீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துக்களில் வில்லங்கம் ஏற்பட்டு சிறிய இழப்பிற்குப் பின் பிரச்சனைகள் தீர்க்கப்படும். ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளை தீர்க்க பெருமாளை வணங்குங்கள்.

விருச்சிகம்

வாழ்க்கையில் வசந்தம் ஏற்பட தொடங்கிவிட்டது. உங்கள் முயற்சிகளில் வெற்றிகள் வரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகி உங்களுக்கு அச்சொத்துக்கள் கிடைக்கும். கூட்டு தொழிலில் இருந்து விலகுவீர்கள். மேலும் பல நன்மைகள் நடக்க முருகனை வழிபடுங்கள்.

தனுசு

வேலை உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தடுமாற்ற நிலை ஏற்படும். நகை, நிலம் இவற்றை ஈடுவைத்து சில கடன்களை அடைப்பீர்கள். தாயின் உடல்நிலை நன்றாக இருக்கும். மேலும் பல்வேறு நன்மைகள் நடக்க தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்.

மகரம்

தங்களுடைய வாழ்க்கை துணை மூலம் பொருளாதாரம் சிறப்படையும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். சிறிது காலத்திற்கு உடல் நலத்தில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு வெப்பம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு விலகும். குழந்தைகளின் கல்வி மேம்படும். தொழில்துறையில் தேக்கங்கள் ஏற்பட்டாலும் பின் சீராகிவிடும். வேலை தேடுவோருக்கு அந்த வாய்ப்புகள் தள்ளிப் போகும். நன்மைகள் பெருகிட ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.

கும்பம்

உங்கள் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். உடல் நலத்திற்காக கடன் வாங்க நேரிடும். தொழில் வேளையில் முன்னேற்றம் இருந்தாலும் பொருளாதாரம் இழுபறியாக இருக்கும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும் திட்டமிட்டு செலவிட வேண்டிய காலம் இது வண்டி வாகனங்கள் மூலம் சிரமங்கள் ஏற்படும். ஆஞ்சநேயரை வழிபட்டு மேலும் நன்மைகளை பெறுங்கள்.

மீனம்

தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. குழந்தைகள் படிப்பு வாழ்வு சிறப்படையும். வேலைக்கு காத்திருப்போருக்கு வேலையும் வேலையில் உள்ளோருக்கு பதவி உயர்வும் கிடைக்கும்..தந்தையின் உடல்நிலையில் சற்று பாதிப்பு ஏற்பட்டு சரியாகும். தந்தை வழியில் ஆதாயம் உண்டு. குழந்தைகளின் கல்விச் செலவு மிகும்.வாழ்வில் பல்வேறு நன்மைகளைப் பெற தட்சிணாமூர்த்தி மற்றும் சிவபெருமானை வழிபட்டு மேன்மை அடையுங்கள்.

First published:

Tags: Astrology, Local News, New Year Horoscope 2023, Pudukkottai, Rasi Palan